முரளிதரனின் 800 சர்ச்சை எல்லாம் தெரியும். அவரது 800 ஆவது விக்கெட் யாருனு தெரியுமா ? – விவரம் இதோ

Muralitharan
- Advertisement -

இலங்கை அணியின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தவர் முத்தையா முரளிதரன். சுழற்பந்து வீச்சாளரான இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இதுவரை எந்த ஒரு டெஸ்ட் பந்து வீச்சாளரும் 800 விக்கெட்டுகள் நெருங்கியது கூட இல்லை. இதனை செய்த முதல் வீரர் இவர் தான். 1992 ஆம் ஆண்டு இலங்கை இந்திய அணிக்கு இடையேயான தொடரின் போது அறிமுகமான இவர் 2010 ஆம் ஆண்டுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மாயாஜால பந்துவீச்சை வெளிப்படுத்தி கொண்டிருந்தார்.

Muralitharan 2

- Advertisement -

800 விக்கெட் வீழ்த்தி இலங்கை அணிக்காக சாதித்த மிகப்பெரிய வீரராக இருக்கும் முத்தையா முரளிதரனின் கதை 800 என்ற தலைப்பில் படம் தயாராகி கொண்டிருக்கிறது. இதில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உடன் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டார்.

தற்போது முத்தையா முரளிதரன் 800 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறித்து பார்ப்போம். 133 டெஸ்ட் போட்டிகள் ஆடிய முத்தையா முரளிதரன் முதன்முதலாக 1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ஒருவரின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். கடைசியாக 2010-ம் ஆண்டு இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டிருந்தது.

Muralitharan 1

அப்போது இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருந்த அவர் இதுவே தனது கடைசி டெஸ்ட் போட்டி என்றும் அதிரடியாக அறிவித்திருந்தார். அப்போது அவர் 800 விக்கெட்டை வீழ்த்தாமல் சென்றுவிடுவாரோ என்ற அச்சத்தில் அனைவரும் இருந்தனர். ஆனால் தன்மீதுள்ள நம்பிக்கையால் அதே போட்டியில் தனது 800 ஆவது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

ojha

அவரின் 800 ஆவது டெஸ்ட் விக்கெட்டாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா ஜெயவர்த்தனேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அந்த விக்கெட் தான் முரளிதரனின் 800 ஆவது விக்கெட்டாக அமைந்தது. அந்த போட்டிக்கு பின்னர் முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

Advertisement