ஏலத்தில் எடுக்காதது அதிர்ச்சியாக இருந்தது…என்ன சொல்கிறார் முரளி விஜய்?

vijay
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளுக்கு நாள் நெருங்கி கொண்டே வருகின்றது. வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்கவுள்ள ஐபிஎல்-க்கு இப்போதிலிருந்தே அனைத்து வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

vijay

- Advertisement -

ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் வேளையில் பல்வேறு வீரர்கள் சமூவலைத்தளங்களிலும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.நேற்று நடந்த அப்படியொரு பத்திரிகையாளர் சந்திப்பில் சென்னை அணியை சேர்ந்த பிராவோ மற்றும் முரளி விஜய் ஆகியோர் ஐபிஎல் குறித்தும் அனுபங்களை குறித்தும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

அதில் பேசிய முரளிவிஜய் “ஐபிஎல் ஏலத்தின் முதல்நாளின் போது என்னை யாருமே ஏலத்தில் எடுக்கவில்லை. அப்போது எனக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது எனக்கு. ஆனால் இரண்டாம் நாள் நான் சென்னை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட போது உற்சாகமானேன். மேலும் முதல் நாள் ஏலத்தில் நான் எடுக்கப்படாத போது கவுண்டி போட்டிகளில் விளையாட வருமாறு கேட்டுக்கொண்டனர்.

மற்ற அணிகளில் விளையாடிய போதும் சென்னை தான் என்னுடைய விருப்பத்திற்குரிய அணி. மும்பை அணியுடனான முதல் போட்டியில் ஆடுவதற்கக காத்திருக்கின்றேன். இந்த தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திட முயற்சிப்பேன். சென்னை அணி ஒரு குடும்பம் போன்றது. இப்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவரும் நான் விரைவில் அனைத்து போட்டிகளிலும் விளையாட வருவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement