நம்ம இந்தியாவில் அவர் பிறந்ததுக்கு நாம் பெருமைப்படனும்.. அவர் செய்ததை யாராலும் செய்ய முடியாது – முரளி விஜய்

Murali Vijay
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முரளி விஜய் சர்வதேச போட்டிகளில் இருந்தும், ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற வேளையில் தொடர்ந்து கிரிக்கெட் தொடர்பான பணிகளையே மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது எதிர்வரும் 2026 ஐ.பி.எல் மினி ஏலத்திற்கு முன்னதாக தன்னுடன் விளையாடிய வீரர்கள் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் அவர் பிறந்ததற்கு நாம் பெருமைப்படனும் : முரளி விஜய்

அந்த வகையில் அவர் அளித்த பிரத்யேக பேட்டி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோனி இந்தியாவில் பிறந்ததற்கு நாம் பெருமைப்பட வேண்டும் என்றும் அவரது கேப்டன்சியில் உள்ள பலன்கள் என்னென்ன? என்பது குறித்தும் வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : தோனி தனித்துவமான மனிதர். எப்போதுமே இயல்பாக இருக்கக்கூடியவர். தனிப்பட்ட முறையில் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்திய அணிக்காக செய்ததை யாராலும் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். கேப்டனாக அனைத்து விதமான கோப்பைகளையும் வென்று கொடுத்தவர்.

கேப்டனாக மட்டுமின்றி ஒரு பேட்ஸ்மேனாகவும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். எத்தனையோ போட்டிகளை அவர் பினிஷராக வென்று கொடுத்துள்ளார். தோனி 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது கேப்டனாக அவர் எடுத்த முடிவுகள் தான் அந்த கோப்பையை கைப்பற்ற உதவியது என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் அந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியின் போது கடைசி ஓவரை வீச சீனியர் வீரராக ஹர்பஜன் சிங் இருந்தும் அவர் ஜோகிந்தர் சர்மாவிடம் பந்தினை கொடுத்து வரலாறு நிகழ்த்தி இருந்தார். இப்படி கேப்டனாக மாற்றி யோசிக்க வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : ஒருநாள் தொடர் முடிந்த கையோடு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் எடுத்துள்ள புதிய முடிவு – ஸ்மார்ட் மூவ்

அந்த வகையில் அவர் கேப்டனாக யோசித்த விடயங்கள் எல்லாம் நல்ல முடிவுகளை தந்துள்ளன. சென்னை அணியில் தோனியின் கீழ் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி. அவர் எங்களுக்கு கொடுத்த வாய்ப்பு எங்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்றது என்றும் முரளி விஜய் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement