- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2009இல் 3 ஸ்டேன்ஸ்.. சச்சின் சச்சின் தான் ப்ரோ.. தோனி, யுவ்ராஜால் முடியாததை செஞ்சாரு.. முரளி விஜய்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் காலம் கடந்தும் அனைவராலும் பேசப்படக்கூடிய மாஸ்டர் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். 16 வயதில் அறிமுகமாகி வாசிம் அக்ரம் முதல் ஷேன் வார்னே வரை உலகின் தரமான பவுலர்களை எதிர்கொண்ட அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்துள்ளார். அத்துடன் 100 சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

அந்த வகையில் கடைசியாக நியூசிலாந்து மண்ணில் எம்.எஸ். தோனி தலைமையில் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்வதற்கு சச்சின் டெண்டுல்கர் முக்கிய பங்காற்றினார். அத்தொடரில் ஹமில்டன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய சச்சின் 160 ரன்கள் குவித்தார். அதனால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய சச்சின் ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

ஒரே இன்னிங்ஸில் 3 ஸ்டேன்ஸ்:

எஞ்சிய 2 போட்டிகள் டிராவில் முடிந்ததால் இந்தியா 1 – 0 (3) என்ற கணக்கில் நியூசிலாந்து மண்ணில் தொடரை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் அப்போட்டியில் நியூசிலாந்து பவுலர்களை எதிர்கொள்ள 3 விதமான நிலைப்பாடுகளை (பேட்டிங் ஸ்டேன்ஸ்) பயன்படுத்துவேன் என்று சச்சின் தன்னிடம் சொன்னதாக முரளி விஜய் தெரிவித்துள்ளார். அதை களத்தில் செய்து காட்டிய சச்சின் அற்புதமான சதமடித்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

அந்த டெக்னிக் தெரியாமல் யுவ்ராஜ் சிங், தோனி உட்பட மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தடுமாறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி டருவார் கோலி யூட்யூப் சேனலில் முரளி விஜய் பேசியது பின்வருமாறு. “நாங்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது சச்சின் பேட் செய்வதற்கு தயாரானார். பிட்ச்சில் 6 – 9 மி.மீ அளவுக்கு ஈரமான புற்கள் இருந்தன”

- Advertisement -

முரளி விஜய் வியப்பு:

“அப்போது அருகில் அமர்ந்திருந்த என்னிடம் சச்சின். “முதல் செஷனில் நான் ஃபிரண்ட் ஃபிரஸ் முறையில் விளையாடப் போகிறேன். பின்னர் முழுவதுமாக பின்னோக்கிச் சென்று விளையாடுவேன். பின்னர் மீண்டும் ஃபிரண்ட் ஃபிரஸ் முறையில் அட்ஜஸ்ட் செய்து விளையாடுவேன். ஏனெனில் பிட்ச்சில் கொஞ்சம் பவுன்ஸ் இருக்கிறது” என்று சொன்னார். ஒருவர் அப்படி தன்னுடைய நிலைப்பாடு மாற்றும் டெக்னிக்கை மாற்றி விளையாடியதை நான் எப்போதும் பார்க்கவில்லை”

இதையும் படிங்க: அட்டகாசமாக ஆடும் அபிஷேக்.. விராட் கோலி மாதிரி வரனும்ன்னா இதையம் கத்துக்கனும்.. ஃகைப் அட்வைஸ்

“எனவே சச்சின் பாஜி விளையாடுவதைப் பார்க்க நான் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். கடைசியில் அவர் சொன்னதை கச்சிதமாக செய்தார். மிகவும் ரைமிங்கல் விளையாடிய அவர் என்ன செய்கிறார், எப்படி தன்னுடைய இன்னிங்ஸை அணுகுகிறார் என்று நான் பார்த்தேன். சச்சினால் மட்டுமே அதை செய்திருக்க முடியும். அப்போட்டியில் தோனி, யுவ்ராஜ் ஆகியோரும் விளையாடினார்கள். ஆனால் அவர்கள் அனைவருமே தடுமாறினார்கள். சச்சின் சச்சின் தான் ப்ரோ. நாம் அனைவரும் அவர் வாழும் நிலத்தில் இருப்பதற்கு ஆசீர்வாதிக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -