அட்டகாசமாக ஆடும் அபிஷேக்.. விராட் கோலி மாதிரி வரனும்ன்னா இதையும் கத்துக்கனும்.. ஃகைப் அட்வைஸ்

Mohammed Kaif
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 118 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய இந்திய அணி 15.5 ஓவரில் 120/3 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்று 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு ஒருபுறம் திலக் வர்மா 25* (34), சுப்மன் கில் 28 (28), சூரியகுமார் 12 (11) என மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட முடியாமல் திண்டாட்டினார்கள். ஆனால் மறுபுறம் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 35 (16) ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதனால் ஒருவேளை அபிஷேக் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டாமல் போயிருந்தால் இந்தியாவின் வெற்றி கேள்விக் குறியாகிருக்கும் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

அட்டகாசமான அபிஷேக்:

அந்தளவுக்கு முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அமர்க்களப்படுத்திய அபிஷேக் சர்மா தன்னை நம்பர் ஒன் ஐசிசி பேட்ஸ்மேன் என்பதை நிரூபிக்கும் வகையில் அட்டகாசமாக விளையாடினார். இந்நிலையில் குறை சொல்ல முடியாத அளவுக்கு அசத்தும் அபிஷேக் சர்மா பவர்பிளே முடிந்ததும் கொஞ்சம் நிதானத்துடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் கேட்டுக் கொண்டுள்ளார்.

அப்போது தான் விராட் கோலி போல பெரிய ரன்கள் குவிக்க முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “35 ரன்கள் அடித்ததை வைத்து அபிஷேக் ஷர்மா எந்த தன்னம்பிக்கையும் பெற்றிருக்க மாட்டார். ஏனெனில் நன்கு செட்டிலாகி 35 ரன்கள் அடித்த எனக்கு 50 – 60 ரன்களை அடிப்பதற்கான வாய்ப்பிருந்தது என்று அவர் நினைத்திருப்பார். ஒருவேளை மிடில் ஓவர்களில் விராட் கோலி சிங்கிள் எடுத்து விளையாடாமல் போயிருந்தால் 50 சராசரியை தொட்டிருக்க மாட்டார்”

- Advertisement -

ஃகைப் அட்வைஸ்:

“அது போன்ற பேட்டிங் சராசரியை நீங்களும் பெற விரும்பினால் அந்த விஷயங்களை செய்ய வேண்டும். மிகவும் இளமையாக இருக்கும் அபிஷேக் ஒவ்வொரு பந்திலும் 4 அல்லது 6 அடிக்கக்கூடாது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். அவர் பவர்பிளேவில் சிக்ஸர்கள் அடிப்பது நல்லது. ஆனால் அங்கே 35 – 40 ரன்கள் எடுத்ததும் நீங்கள் அடுத்த 10 – 15 ரன்களை சாதுரியமாக எடுக்கப் பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க: அவங்கள பயந்து திட்டம் போட வைக்கும் அபிஷேக் தான் இந்தியாவின் ஜெயசூர்யா.. உத்தப்பா பாராட்டு

“நீங்கள் எவ்வளவு நல்ல பேட்ஸ்மேனாக இருந்தாலும் போட்டி முழுவதும் ஒரே மாதிரியாக அதிரடியாக விளையாடுவது அசாத்தியமானது. பவர்பிளேவில் அடித்து நொறுக்குவது நல்லது. ஆனால் அதற்குப் பின் நீங்கள் கொஞ்சம் நிதானமான தொனியில் விளையாட வேண்டும்” என்று கூறினார். இதை அடுத்து 4வது போட்டி டிசம்பர் 17ஆம் தேதி லக்னோவில் நடைபெற உள்ளது.

Advertisement