அவங்கள பயந்து திட்டம் போட வைக்கும் அபிஷேக் தான் இந்தியாவின் ஜெயசூர்யா.. உத்தப்பா பாராட்டு

Robin Uthappa
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தரம்சாலாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 7 வித்தியாசத்தில் வென்றது. டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாபிரிக்கா 118 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய இந்தியா 15.5 ஓவரிலேயே 120/3 ரன்களை அடித்து எளிதாக வென்று 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு சுப்மன் கில் 28 (28), திலக் வர்மா 25* (34), கேப்டன் சூரியகுமார் யாதவ் 12 (11) என ஒருபக்கம் முக்கிய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றமாக விளையாடி கணிசமான ரன்கள் அடித்தனர். ஆனால் அதே பிட்ச்சில் எதிர்ப்புறம் அடித்து நொறுக்கிய அபிஷேக் 35 (16) ரன்கள் குவித்தார். அதனால் ஐசிசி தரவரிசையின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் அட்டகாசமாக விளையாடினார் என்பதே சொல்லலாம்.

- Advertisement -

இந்தியாவின் ஜெயசூர்யா:

2025 முழுவதும் அதிரடியாக விளையாடி வரும் அவர் ஒரு காலண்டர் வருடத்தில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்நிலையில் 25 வயதிலேயே எதிரணிகள் தம்மை சாய்ப்பதற்கு திட்டத்தை தீட்ட வைக்கும் அளவுக்கு அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடுவதாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பாராட்டியுள்ளார்.

25 வயதுக்குள் டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடித்துள்ள அபிஷேக் சர்மா இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா போல ஓப்பனிங்கில் எதிரணிகளை பந்தாடுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா – தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பே சயீத் முஸ்டாக் அலி கோப்பையில் அபிஷேக் எதிரணிகளை அடித்து நொறுக்கினார்”

- Advertisement -

உத்தப்பா பாராட்டு:

“எனவே அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். லுங்கி நிகிடி முதல் பந்தில் அவரை செட் செய்தார். அங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் விளையாடிய அபிஷேக் எதிரணி தமக்கு எதிராக நெருக்கமான லென்த், லெக் ஸ்டம்ப் லென்த்தில் பந்து வீசுவார்கள் என்பதை புரிந்து பேட்டிங் செய்தார். அந்த லென்த் கொஞ்சம் தவறினாலும் அவர் எதிரணி பவுலர்களை தண்டிக்க தயாராக இருந்தார்”

இதையும் படிங்க: 48 விக்கெட்ஸ்.. புவனேஸ்வர் குமாரை முந்திய அர்ஷ்தீப்.. நியூ பால் ஸ்பெஷலிஸ்டாக வரலாற்று சாதனை

“டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே 300 சிக்ஸர்கள் அடித்துள்ளது அவர் எப்படிப்பட்ட பவர்ஃபுல்லான பேட்ஸ்மேன் என்பதைச் சொல்கிறது. சொல்லப்போனால் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஆதிக்கத்தை செலுத்தும் அவர் எனக்கு சனாத் ஜெயசூர்யாவை நினைவுபடுத்துகிறார். எதிரணி பவுலர்களுக்கு அவர் பயத்தைக் கொடுக்கிறார். அதை ஒரு வீரர் எரியும் ஃபார்மில் இருந்தால் மட்டுமே உங்களால் பார்க்க முடியும். இளம் வீரராக இருக்கும் அவரை அடிக்கவிடாமல் செய்ய எதிரணிகள் திட்டமிடுகின்றன. அதை சமாளிப்பதற்கு தேவையான தீர்வுகளைக் கொண்டுள்ள அபிஷேக் ஊக்கத்துடன் சிந்திப்பது அற்புதமானது” என்று கூறினார்.

Advertisement