ரெய்னாவின் இடத்தை முரளி விஜய் நிரப்புவாரா ? முரளி விஜய்யின் மறுபக்கம் – சுவாரசிய தகவல் இதோ

vijay

இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக இருந்த சுரேஷ் ரெய்னா விளையாடமாட்டார். திடீரென ஏற்பட்ட சிறிய சண்டை காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி விட்டார். மேலும் இந்த வருடம் ஆடமாட்டேன் என்று அறிவித்து விட்டு மீண்டும் என்னை நீங்கள் சிஎஸ்கே அணியில் பார்க்கலாம் என்றும் அறிவித்திருந்தார். எப்படிப் பார்த்தாலும் இந்த வருடம் ஆடமாட்டார்.

Raina

இப்படி ஒரு சூழ்நிலையில் சென்னை அணி இருக்க அவருக்கு மாற்றாக ஒரு மிகச் சிறந்த வீரரை தேர்வு செய்யவேண்டும். அணியில் பல வீரர்கள் இருந்தாலும் சுரேஷ் ரெய்னாவை போன்று ஒரு வீரரை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் அவர் இடத்தை நிரப்ப பல வீரர்கள் இருக்கிறார்கள். அதற்கு முதல் ஆளாக வருபவர் முரளி விஜய். இவர் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல வருடங்கள் விளையாடியிருக்கிறார்

குறிப்பாக 2009ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். இவர் மிகப்பெரிய போட்டிகளில் நாயகனாகவே பார்க்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின்போது ராஜஸ்தான் அணிக்கு 57 பந்துகளில் 127 ரன்கள் எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சதம் அடித்திருந்தார்.

இதன் காரணமாக இரண்டு முறையும் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவின் இடத்தை முரளிவிஜய் எவ்வாறு சரி போகிறார் என்பது குறித்து பல கேள்விகள் எழுந்து வருகிறது.

- Advertisement -

ஒன்று முரளி விஜய் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டு அம்பத்தி ராயுடு மூன்றாவது இடத்திற்கு வரவேண்டும், அல்லது முரளி மூன்றாவது இடத்தில் ஆடவேண்டும். முரளிவிஜய் மூன்றாவது இடத்தில் வீரராக ஆடி பழக்கமில்லை. இதன் காரணமாக இவர் துவக்க வீரராக தான் களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது.

Vijay

ஏற்கனவே முரளிவிஜய் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி தோனியின் யுக்தி என்ன என்பதை நன்றாக அறிந்திருப்பார். இதன் காரணமாக ரெய்னாவின் இடத்தை இணைப்புகளில் முரளி விஜய்க்கு மிகப்பெரிய பிரச்சனை இருக்காது என்றே தெரிகிறது.