பி.சி.சி.ஐ யுடன் இருந்த அதிர்ப்தியினால் தான் ஓய்வை அறிவித்தாரா முரளி விஜய்? – விவரம் இதோ

Murali-Vijay
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும், தமிழக வீரருமான முரளி விஜய் இந்திய அணிக்காக கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 106 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீர் அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தினார்.

,murali vijay

- Advertisement -

2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமான அவர் முதல் போட்டியில் ரன்களை குவிக்க தவறினாலும் அதன் பிறகு அவர் விளையாடிய பேட்டிங் டெக்னிக் மற்றும் அணுகுமுறை என அனைத்துமே கிரிக்கெட் வல்லுனர்களால் பாராட்டப்பட்டது. அதன் பிறகு தனது தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திய முரளி விஜய் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இந்திய அணியின் துவக்க வீரராக தன்னுடைய அட்டகாசமான பேட்டிக் காரணமாக ஏகப்பட்ட சாதனைகளை படைத்தார்.

அதோடு தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தால் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிக்கான துவக்க வீரராகவும் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 ஆகியவற்றில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் தவறவிட்டிருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடி வந்த அவருக்கு ப்ரித்வி ஷாவின் வருகையின் போது சில போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

vijay

அதன் பிறகு படிப்படியாக ஓரம் கட்டப்பட்ட அவர் ஃபார்ம் அவுட் மற்றும் வயது முதிர்ச்சி என இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பு கிடைக்காமலே போனார். இந்நிலையில் பிசிசிஐ உடன் ஏற்பட்ட அதிர்ப்தி காரணமாகவே அவர் ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் கடந்த 2018-ஆம் ஆண்டிற்கு பிறகு தன்னுடைய வாய்ப்புக்காக ஐந்து ஆண்டுகள் காத்திருந்த முரளி விஜய்க்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

அதேபோன்று அண்மையில் அவர் வெளியிட்டிருந்த ஒரு செய்தியில் : இந்திய அணியில் 30 வயதை ஒரு வீரர் கடந்துவிட்டாலே 80 வயது முதியவர் போல பார்க்கின்றனர். எனவே நான் இங்கு வாய்ப்புகளை தேடிக்கொண்டிருப்பதை விட வெளிநாட்டு வாய்ப்புகளை தேடி அலைவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று வெளிப்படையாக தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தார். மேலும் அவர் கூறியது போலவே இங்கு ஓய்வை அறிவித்துள்ள முரளி விஜய் அடுத்த கட்டமாக வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பேன் என்று கூறி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இந்திய அணி நிர்வாகத்தின் ஆசையால் வாழ்க்கையை இழந்த லக்னோ பிட்ச் தயாரிப்பாளர் – வெளியான செய்தியால் ரசிகர்கள் கோபம்

இப்படி பிசிசிஐ-யுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே அவர் ஓய்வை அறிவித்துள்ளார் என்றும் இதன் காரணமாக தொழில் முறை கிரிக்கெட்டாக அவர் விரைவில் வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களின் பங்கேற்பார் என்பதாலும் வாய்ப்பு இல்லாமல் இப்படி இருப்பதைவிட வெளிநாடுகளில் விளையாடலாம் என்று முடிவை அவர் எடுத்ததாலே ஓய்வை அறிவித்தார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement