இவங்க 2 பேரும் சி.எஸ்.கே அணியில் சுத்த வேஸ்ட். மொதல்ல அவங்கள மாத்துங்க – இல்லனா எப்போவும் தோல்வி தான்

CSK-1
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரில் பலம்வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி முதல் போட்டியிலேயே வெற்றி கணக்கை துவக்கிய சென்னை அணிக்கு அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் (ராஜஸ்தான், டெல்லி) ஆகிய அணிகளுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போட்டியிலும் சென்னை அணியின் முக்கிய வீரரான ராயுடு விளையாட முடியாமல் போனது சென்னை அணிக்கு பெருத்த பின்னைடைவை தந்தது.

- Advertisement -

முதல் போட்டியில் தனியாளாக நின்று தனது சிறப்பான ஆட்டத்தை சென்னை அணிக்காக கொடுத்த ராயுடுவால் அடுத்த இரண்டு போட்டிகளில் ஆடமுடியாமல் போனது. இந்த விடயமே சென்னை அணிக்கு தோல்வியை தந்தது என்று ரசிகர்கள் பலரும் கூறிவரும் நிலையில் சென்னை அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் “பிளேஆப்” சுற்றுக்காவது முன்னேறுமா ? ஆகாதா ? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் டூபிளெஸ்ஸிஸ் மட்டுமே தற்போது ஆறுதல் அளிக்கும் விதமாக விளையாடி வருகிறார். அவரை தவிர வேறு யாரும் அந்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. அதிலும் குறிப்பாக துவக்க வீரர் முரளி விஜய் மூன்று போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி வருகிறார். அவரது தேர்வு அணிக்கு தேவையில்லாத வீரர் என்றும் அவருக்கு பதிலாக வேறு வீரரை சோதித்து பார்க்கலாம் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

Vijay

அதுமட்டுமின்றி கடந்த சில வருடங்களாக ஆல்-ரவுண்டராக விளையாடி வந்த ஜாதவ் இப்பொழுது இந்த ஐபிஎல் தொடரில் பந்துவீசவும் வருவதில்லை. பேட்டிங்கும் சரியாக செய்வதில்லை இவர்கள் இருவருமே சென்னை அணிக்கு தேவையில்லாத வீரர்கள் என்றும் அவர்களை ஏன் இன்னும் தோனி தொடர்ந்து அணியில் வைத்திருக்கிறார் ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே ரெய்னா விட்டுச் சென்ற இடம் அணியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சென்னையில் கவலைக் இடத்தில் உள்ளது.

jadhav

விரைவில் இதற்கு முடிவு காணாவிட்டால் சென்னை அணி பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் அதுமட்டுமின்றி இத்தனை ஆண்டுகளாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி வந்த சென்னை அணி இம்முறை லீக் போட்டிகளிலேயே வெளியேறும் என்பதே நிதர்சனமான உண்மை. எனவே இனிவரும் போட்டிகளில் முரளி விஜய் மற்றும் ஜாதவ்க்கு பதிலாக அணியில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்று பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement