நான் இந்திய அணியில் விளையாட கங்குலியே காரணம். அவருக்கு பிடிச்ச வீரர் நான்தான் – மனம்திறந்த தமிழக வீரர்

Ganguly
- Advertisement -

இந்திய அணிக்காக 2000ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து தேர்வானவர் முரளி கார்த்திக். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காக பெரிதும் இவர் ஆடவில்லை என்றாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு 8 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 37 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். இவர் ஆடிய அனைத்து போட்டிகளுமே கங்குலியின் தலைமையில் நடைபெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

murali 1

ஓரளவு சிறப்பாகவே செயல்பட்ட இவருக்கு தொடர்ந்து இந்திய அணியில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் சுழற்பந்து வீச்சில் ஜாம்பவான்கள் இருப்பதுதான் என்று ஒரு கருத்து இருந்தாலும், சௌரவ் கங்குலி தான் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்ற மற்றொரு கருத்து இருக்கிறது.

- Advertisement -

அதாவது இடது கை பேட்ஸ்மேனான சவுரவ் கங்குலிக்கு இடது கை சுழற்பந்து வீச்சாளரான முரளி கார்த்திக்கின் பந்துவீச்சு அடிப்பதற்கு ஈசியாக இருந்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் அவருக்கு பெரிதும் வாய்ப்பளிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது. தற்போது இந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முரளி கார்த்திக். இதுகுறித்து அவர் பேசுகையில்…

murali 2

தாதா என்னுடைய பந்துவீச்சை அருமையாக ஆடுவார். ஏனெனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் என்னை 3 ஆண்டுகள் வைத்திருந்தார். என்னை அவர் எப்போதும் விட்டுக் கொடுத்ததே இல்லை. அவரது ஆதரவு எனது கிரிக்கெட் இறுதிப் பயணம் வரை இருந்தது. கொல்கத்தா அணியில் இருந்து புனே வாரியர்ஸ் அணிக்கு அவர் சென்ற போது என்னையும் இழக்க விரும்பாமல் உடனேயே அழைத்துச் சென்றார்.

அதன்பின்னர் சிஎஸ்கே அணி என்னை புனே அணியிடம் இருந்து வாங்க முற்பட்டது. ஆனாலும், என்னை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறினார். அதன்பின்னர்தான் ஜடேஜாவை சிஎஸ்கே வாங்கியது. மேலும், சிஎஸ்கே அணிக்கு எதிராக எனக்கு 104 டிகிரி காய்ச்சல் இருந்தது. அந்த காய்ச்சலும் எனது திறமை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறி என்னை ஆட வைத்தார்.

Murali

  1. அந்த அளவிற்கு எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தார். நான் குறைந்த சர்வதேச போட்டிகளாவது ஆடி இருக்கிறேன் என்றால் அதற்கு காரணமும் கங்குலி தான் என்று புகழாரம் சூட்டியுள்ளார் முரளி கார்த்திக். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்போது தொடர்ந்து கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement