இந்தியாவை வீட்டுக்கு அனுப்ப இப்படியா சதி பண்ணுவீங்க.. பாகிஸ்தான் அணி மீது முனாப் படேல் அதிருப்தி

Munaf Patel
- Advertisement -

ஐசிசி மகளிர் 2024 டி20 உலகக் கோப்பை ஐக்கிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் 2வது போட்டியில் போராடி பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 3வது போட்டியில் இலங்கையிடம் பெரிய வெற்றி பெற்றது.

ஆனால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் இந்தியா போராடி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அப்போட்டியில் கடைசி 6 பந்துகளில் 4 இந்திய வீராங்கனைகள் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரக்கை எதிர்புறம் நன்கு செட்டிலாகியிருந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத்துக்கு கொடுக்கத் தவறினார்கள். அதனால் ஹர்மன்ப்ரீத் 54* ரன்கள் எடுத்தும் இந்தியா பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

ஏமாற்றிய பாகிஸ்தான்:

அந்த சூழ்நிலையில் நியூசிலாந்தை தங்களது கடைசி போட்டியில் பாகிஸ்தான் வீழ்த்தினால் இந்தியா செமி ஃபைனல் செல்லலாம் என்று நிலை உருவானது. அப்போட்டியில் ஓரளவு சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் அணி நியூஸிலாந்தை 111 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. ஆனால் அதைத் துரத்திய பாகிஸ்தான் மோசமாக பேட்டிங் செய்து 56 ரன்களுக்கு அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது.

அதனால் பாகிஸ்தானுடன் சேர்த்து இந்தியாவையும் நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பிய நியூசிலாந்து 2016க்குப்பின் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. அதனால் பாகிஸ்தான் ஏதாவது உதவி செய்யுமா என்று காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. மறுபுறம் 2019 ஆடவர் உலகக் கோப்பையில் இதே போன்ற சூழ்நிலையில் இங்கிலாந்திடம் தோற்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் செமி ஃபைனல் செல்ல உதவவில்லை.

- Advertisement -

முனாப் படேல் ஏமாற்றம்:

எனவே அந்த தோல்விக்கு இன்று பழிவாங்கியதாக பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர். முன்னதாக அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனைகள் மொத்தம் 8 கேட்ச்களை தவற விட்டனர். குறிப்பாக பரம எதிரியான இந்தியா தங்களுடைய வெற்றியால் செமி ஃபைனலுக்கு சென்று விடக்கூடாது நோக்கத்துடன் பாகிஸ்தான் வீராங்கனைகள் 8 கேட்ச்களை தவற விட்டது அவர்களின் அஜாக்கிரதையான ஃபீல்டிங்கில் தெரிந்தது.

இதையும் படிங்க: இந்திய டெஸ்ட் அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரராக விளையாட இதுதான் காரணம் – ரோஹித் சர்மா பேட்டி

ஏனெனில் அந்த 8இல் ஒன்றிரண்டை தவிர்த்து 5க்கும் மேற்பட்ட கேட்சுகள் அல்வா போல எளிதாக வந்தது. ஆனாலும் இந்தியாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் பாகிஸ்தான் வீராங்கனைகள் அதை தவற விட்டதாக 2011 உலகக்கோப்பை வென்ற முன்னாள் வீரர் முனாப் படேல் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இன்றைய போட்டியில் பாகிஸ்தான் எத்தனை கேட்சுகளை விட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார்.

Advertisement