ஹர்பஜன் இல்லாதது நமக்கு இழப்புதான்…வருந்தும் பயிற்சியாளர் – யார் , ஏன் தெரியுமா ?

Harbhajan
- Advertisement -

இந்த ஐபிஎல்-இல் மும்பை அணியில் ஹர்பஜன்சிங் இல்லாதது பேரிழப்பு என அந்த அணியின் ஆலோசகரான அனில் கும்ப்ளே வருத்தம் தெரிவித்துள்ளார்.பல நாட்களாக ஆவலோடு நாம் அனைவரும் எதிர்பார்த்த 11வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.

harbhajan

- Advertisement -

8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல்-இல் மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.இத்தனை நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் இனி தினமும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வீரர்கள் பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஆரம்பகாலம் தொட்டு சென்ற வருடம் வரை ஒரே அணிக்காக விளையாடிய சில வீரர்கள் இந்த ஐபிஎல் சீசனில் வேறு வேறு அணிகளுக்காக விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.அதில் முக்கியமானவர்கள் கம்பீரும்,ஹர்பஜன்சிங்கும்.முதல் ஐபிஎல் சீசன் முதலே கம்பீர் கொல்கத்தா அணிக்காகவும், ஹர்பஜன்சிங் மும்பை அணிக்காகவும் விளையாடி வந்தவர்கள்.

kumble

இந்நிலையில் ஹர்பஜன்சிங்கை இந்தாண்டு சென்னை அணி ஏலத்தில் எடுத்தக்கொண்டது.இதனால் ஹர்பஜன்சிங்கை இழந்த வருத்தத்தில் உள்ளார் மும்பை அணியின் ஆலோசகரான கும்ப்ளே.இதுகுறித்து பேசிய கும்ப்ளே “ஹர்பஜன்சிங் மிகச்சிறந்த சுழற்பந்து பந்துவீச்சாளர். அவர் இந்தமுறை மும்பை அணியில் இல்லாததை அணி வீரர்கள் நிச்சயம் வெறுமையாக உணர்வார்கள். அவருக்கு பதிலாக சிறந்த ஆல்ரவுண்டரான குணால் பாண்டியா மற்ற சுழற்பந்து வீச்சாளர்களை வழிநடத்துவார்.

ஹர்பஜன்சிங் போன்ற அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தமுறை அணியில் இல்லாமல் போனது பேரிழப்பு தான் எங்களுக்கு. மலிங்கா போன்ற வேகப்பந்துவீச்சாளர்களும் இந்தமுறை மும்பை அணிக்காக களமிறங்கப் போவதில்லை. எனவே இளம் வீரர்களான முஸ்திபிஜீர் ரஹீம், பும்ரா, பிரித்வி ஷா, நாகர்கோட்டி போன்ற வீரர்கள் தான் தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்படவேண்டும்” என்றார்.

Advertisement