மும்பை அணியின் பிலேஆப் கனவை தகர்த்த டெல்லி அணி…!

- Advertisement -

மும்பை அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை அடுத்து மும்பை அணி ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது.

Rohitsharma

- Advertisement -

டெல்லி அணி நிர்ணயித்த 175 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் 3 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ், லாமிசேன் வீசிய 4-வது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த இஷான் கிஷான் பொறுமைகாக்க மறுமுனையில் லீவிஸ் அதிரடி காட்டினார். பவர் பிளேவில் 57 ரன்களைக் குவித்த மும்பை, 7வது ஓவரின் முதல் பந்தில் இஷான் கிஷான் ஆட்டமிழந்தார்.

சிறிது நேரத்திலேயே லீவிஸூம் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 48 ரன்கள் எடுத்தார். லீவிஸைத் தொடர்ந்து கிரண் போலார்ட் மற்றும் குர்ணால் பாண்ட்யா ஆகியோர் லாமிசேன் வீசிய 10வது ஓவரில் ஆட்டமிழந்தனர். அப்போது மும்பை அணி, 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

mumbai indians

இதையடுத்து கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இணைந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இந்த ஜோடியை ஹர்ஷல் படேல் பிரித்தார். ரோகித் ஷர்மா 13 ரன்களுடன் வெளியேறிய அடுத்த ஓவரிலேயே பாண்ட்யாவும் 27 ரன்களுடன் நடையைக் கட்டினார்.

- Advertisement -

மும்பை அணியின் வெற்றிக்குக் கடைசி 5 ஓவர்களில் 58 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவர்களில் பென் கட்டிங் அதிரடி காட்ட, மும்பை அணி வெற்றியை நோக்கி மெதுவாக முன்னேறியது.ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய பென் கட்டிங், ஹர்ஷல் படேல் வீசிய அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார்.

MI Win moment

3 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 163 ரன்களுக்கு ஆட்டமிழந்த மும்பை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோல்வியை அடுத்து, மும்பை அணி நடப்பு, ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. டெல்லி தரப்பில் போல்ட், லாமிசேன் மற்றும் மிஷ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Advertisement