ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இந்த ஆண்டு 7 முக்கிய வீரர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். 2008ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டும் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதுவரை 13 ஐபிஎல் சீசன்கள் நடைபெற்ற இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று யாரும் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை கோப்பையை வென்று இருக்கிறது. 2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 வது ஐபிஎல் சீசனின் மினி ஏலத்தை பிப்ரவரி 11ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
எனவே இதற்கு முன்னர் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியின் ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களின் பட்டியலையும், மோசமாக விளையாடியதால் வெளியேற்றப்படும் வீரர்களையும் அறிவித்திருக்கிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட வீரர்கள் அனைவரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் மினி ஏலத்தின் மூலம் மற்ற அணியில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கேதர் ஜாதவ், முரளி விஜய், வாட்சன் உள்ளிட்ட ஆறு வீரர்களை நீக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 7 முக்கிய வீரர்களை வெளியேற்றப்பட்டு இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா உரிமையாளர்கள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணி வெளியேற்றியுள்ள 7 வீரர்கள் : 1) லசித் மலிங்கா, 2) பால்வாண்ட் ராய், 3) டிக்விஜய் தேஷ்முக், 4) நாதன் கூல்டர்-நைல், 5) ஜேம்ஸ் பாட்டின்சன், 6) ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், 7) மிட்செல் மெக்லெனேகன்.