இப்படி ஒரு வீக்னஸ்ஸை வச்சிக்கிட்டு மும்பை அணி இன்றைய போட்டியில் டெல்லியை வெல்லுமா ? – ஓர் அலசல்

MI
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவிருக்கின்றன. ஐபிஎல் தொடர் என்றாலே ரசிகர்களால் மிகப் பெரிய பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுவது மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான். ஆனால் கடந்த சீசனில் இருந்து மிகப்பெரிய அணியாக வளர்ந்து வருகிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

Chahar 1

- Advertisement -

இன்று, அவ்வளவு பலம் வாய்ந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியை தான் சந்திக்கப் போகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இதற்கிடையில் இந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலகீனமாக பார்க்கப்படுவது அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் தான். மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சரியாக செயல்படாத காரணத்தால், இந்த தொடரில் அந்த அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் 160 ரன்கள் கூட அடிக்க முடியாமல் தவித்து வருகிறது.

இன்னும் அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லார்ட் தங்களுடைய முழு திறனையும் வெளிப்படுத்தவில்லை. அந்த அணி வெற்றி பெற்ற இரண்டு ஆட்டங்களிலும் மிடில் ஓவர்களில் ராகுல் சஹாரும், ஜஸ்பிரித் பும்ராவும் எதிர் அணியின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்தியதே வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

chahar

மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் வீரர்கள் யாரும் இறுதிவரை நின்று பெரிய ரன்களை குவிக்காததால் அது குறித்து ஏற்கனவே கேப்டன் ரோஹித் சர்மா அதிருப்தியில் இருந்து வருகிறார் . இந்தப் போட்டிக்கு முன்னதாக இதனை சரி செய்யும் பொருட்டு வீரர்களிடம் கலந்து பேசி இருக்கிறார் ரோகித் சர்மா.

pollard

எனவே மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து இந்தப் போட்டியிலாவது மிடில் ஆர்டரில் சரியாக விளையாடுவார்களா என்பதை இன்று நடைபெற இருக்கும் போட்டியில் காணலாம். அதேவேளையில் கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சேஸிங்கில் பஞ்சாப் அணியை வீழ்த்திய டெல்லி அணி பெரிய நம்பிக்கையோடு இந்த போட்டியில் களமிறங்குகிறது.

Advertisement