5 முறை சாம்பியன். 14 ஆண்டு பயணம். ஆனா இந்த வருஷம் தான் முதல் முறையா மும்பை இந்த சாதனையை பண்ணிருக்காங்க

- Advertisement -

ஐபிஎல் தொடரின் 27ஆவது போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே டெல்லி மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களின் முடிவில் டு பிளிசிஸ்(50) மொயின் அலி(58) மற்றும் ராயுடு(72) ஆகியோரது அதிரடி அரைசதம் காரணமாக 218 ரன்கள் குவித்தது.

rayudu 2

- Advertisement -

இதன் காரணமாக 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி பொல்லார்டின் அசுரத்தனமான அதிரடி ஆட்டத்தினால் 20வது ஓவரின் கடைசி பந்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய பொல்லார்ட் 34 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் என 87 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்து கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியுள்ளது. அதன்படி இதுவரை 5 முறை ஐபிஎல் பட்டத்தை வென்ற அணியாக பார்க்கப்படும் மும்பை அணி இந்த ஆண்டு தனது ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருந்தது இந்த வேளையில் துவக்கம் முதலே அடுத்தடுத்த போட்டிகளில் தோற்று வந்த மும்பை அணி இந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தங்களது வெற்றி பயணத்தை துவங்கியது.

மேலும் இந்த வெற்றியைப் பெற்றதுடன் மட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் தாங்கள் படைத்த சாதனையாக அவர்கள் செய்தது யாதெனில் : 14 ஆண்டுகள் மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாம்பியன் அணியாக இருந்தும் ஒரு முறை கூட அவர்கள் 200 ரன்களுக்கு மேல் சேசிங் செய்ததே கிடையாது.

ஆனால் இம்முறை அந்த இலக்கை உடைத்த மும்பை சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 200க்கும் மேற்பட்ட ரன்களை முதல் முறையாக சேசிங் செய்து ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் பெரும் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் மும்பை அணி இம்முறை தான் 200 ரன்களை கடந்து சேஸிங் செய்துள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

Advertisement