கொல்கத்தாவை வீழ்த்தி டாப் 4 நுழைந்த மும்பை..! 108 ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்த கொல்கத்தா !

kishan
- Advertisement -

இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஐ.பி.எல் தொடரில் இன்று கொல்கத்தாவில் நடந்த போட்டியில் கொல்கத்தா அணியும் மும்பை அணியும் மோதியது. இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கிய போட்டி என்பதால், இதனை ஐ.பி.எல் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர்.

yadhav

- Advertisement -

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்திக் முதலில் பந்துவீச முடிவு செய்தார். மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக சூரியகுமார் யாதவ் மற்றும் லீவில் களமிறங்கினர். லீவிஸ் 18 ரன்னிலும், யாதவ் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தாக ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா மற்றும் இளம் வீரர் இஷான் கிஷன் ஆகியோரும் அதிரடியில் இறங்கினர். குறிப்பாக கிஷன் சிக்சர்களாக பறக்கவிட்டு கொல்கத்தா பந்துவீச்சாளர்களை மிரட்டினார்.

21 பந்துகளில் 62 ரன்கள் குவித்த நிலையில் கிஷன் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் 5 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடித்தார். இறுதியில் கட்டிங் அதிரடியாக விளையாட மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில் சாவ்லா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

mumbai

பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா. முதல் பந்திலே பவுண்டரி அடித்த நரைன், அடுத்த பந்திலே ஆட்டமிழந்தார். இது கொல்கத்தா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடியாக விளையாடத் தொடங்கிய லின், 21 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

- Advertisement -

அடுத்துக் களமிறங்கிய வீரர்கள், விரைவாக தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். உத்தப்பா(14), ராணா(21), ரசல்(2), தினேஷ் கார்த்திக்(5),. ரின்கு சிங்(5) என அனைவரும் விரைவில் ஆட்டமிழந்தனர்.

kkr

18.1 ஓவரில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து. 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது. மும்பை அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, கருணல் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி டாப் -4 க்குள் நுழைந்தது. 4 -வது இடத்தில் இருந்த கொல்கத்தா 5 -வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Advertisement