86க்கு ஆல் அவுட்.. ரோஹித் போனதுமே மிரட்டிய மும்பை.. மேகாலயா 153 வருட சாதனை.. தாக்கூர் ஹாட்ரிக் சாதனை

Shardul Thakur
- Advertisement -

ரஞ்சிக் கோப்பை 2024 – 25 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று நடைபெற்று வருகிறது. அதில் ஜனவரி 30ஆம் தேதி மும்பையில் துவங்கிய எலைட் குரூப் ஏ பிரிவின் லீக் சுற்றுப்போட்டியில் மும்பை மற்றும் மேகாலயா அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அந்தப் போட்டியில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்திய அணியில் விளையாடுவதற்காக சென்றதால் மும்பைக்காக விளையாடவில்லை. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மேகாலயா அணிக்கு நிஷாந்தா சக்கரவர்த்தி 0 ரன்களில் சர்துள் தாகூர் வேகத்தில் அவுட்டானார். அடுத்து வந்த கிசான் லின்டோ 0 ரன்களில் மோஹித் அவஸ்தியிடம் அவுட்டானார்.

- Advertisement -

தாகூர் மிரட்டல்:

அதை விட 3வது ஓவரின் கடைசி 3 பந்துகளில் பாலசந்தர் அனிருத் 0, சுமித் குமார் 0, ஜஸ்கிரட் சிங் 0 என 3 பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த 3 பந்துகளில் சர்துள் டக் அவுட்டாக்கினார். இதன் வாயிலாக ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் மும்பை அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த 5வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவருடைய தெறிக்க விடும் பந்து வீச்சால் 2/6 என மேகாலயா ஆரம்பத்திலேயே திண்டாடியது.

அதன் வாயிலாக ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் 6 விக்கெட் இழப்புக்கு குறைந்த ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை மேகாலயா படைத்தது. உலகளவில் 1872ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் சர்ரே அணிக்கு எதிராக மேர்லிபோர்ன் (0/6) அணிக்கு பின் 2வது குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையும் மேகாலயா படைத்தது.

- Advertisement -

ரோஹித் போனதும்:

அப்படி ஆரம்பத்திலேயே திணறியதால் மேகாலயா 50 ரன்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடைசி நேரத்தில் கேப்டன் ஆகாஷ் சவுத்ரி 16, பிரிங்ஸ்சங் 19, ஹிமான் புகன் 28, அனிஷ் சார்க் 17 ரன்கள் எடுத்தார்கள். அதையும் தாண்டி மேகலாயாவை முதல் இன்னிங்ஸில் 86க்கு சுருட்டி வீசிய மும்பைக்கு அதிகபட்சமாக தாகூர் 4, மோஹித் அவஸ்தி 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையும் படிங்க: வருண் சக்ரவர்த்தி அதுக்கு பயப்படாம தைரியமா செய்றாரு.. அபார கம்பேக் பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டு

இதைத் தொடர்ந்து மும்பை அணி தங்களுடைய பேட்டிங் ஆட்டத்தை விளையாடி வருகிறது. மொத்தத்தில் ரோஹித் சர்மா வருவதற்கு முன்பு வரை மும்பை அணி வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது. ஆனால் ரோஹித் வந்ததும் கடந்த போட்டியில் ஜம்மு காஷ்மீரிடம் 11 வருடங்கள் கழித்து மும்பை தோற்றது. தற்போது அவர் சென்றதும் மீண்டும் மும்பை மிரட்ட துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement