- Advertisement -
உலக கிரிக்கெட்

3 ஆவது ஆப்கனிஸ்தான் வீரராக டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்திய – முஜிபுர் ரஹ்மான்

ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

முஜிபுர் ரஹ்மான் நிகழ்த்திய சாதனை :

அந்த வகையில் நேற்று துபாயில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியின் போது டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ஆப்கானிஸ்தானின் சார்பாக அதிகபட்சமாக ரசூலி 68 ரன்களையும், செத்திக்குல்லா அட்டல் 53 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களை மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக 39 வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது 4 ஓவர்களை வீசி 21 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரஹ்மான் மூன்றாவது ஆப்கானிஸ்தான் வீரராக சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இதையும் படிங்க : என்னோட சிம்பிள் பிளான் இதுதான்.. என் அதிரடிக்கும் அதுதான் காரணம் – ரிங்கு சிங் பேட்டி

இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான எவின் லூயிஸ், ஜான்சன் சார்லஸ் மற்றும் பிரெண்டன் கிங் ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஷித் கான், கரீம் ஜனத் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது வீரராக டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -