அஷ்வின், ஜடேஜாவோடு இந்த தலைமுறை முடிந்தது.. இதுக்கப்புறம் அது இருக்காது – எம்.எஸ்.கே பிரசாத் விமர்சனம்

MSK-Prasad
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இந்த தொடரை இழந்ததோடு மட்டுமின்றி 12 ஆண்டுகளாக இந்திய மண்ணில் தொடர் டெஸ்ட் வெற்றிகளை குவித்து வந்த வெற்றிப் பயணத்தையும் முடித்துக்கொண்டது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அஷ்வின், ஜடேஜாவோடு எல்லாம் முடிந்தது :

மேலும் இதுகுறித்த விமர்சனங்களும் தற்போது அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. ஏனெனில் ஒவ்வொரு நாடும் தங்களது வீரர்களுக்கு சாதகமான மைதானங்களை அமைத்து வந்த நிலையில் இந்தியா மண்ணில் தொடர்ச்சியாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

- Advertisement -

அதே வேளையில் இந்த சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருவதையும் நம்மால் பார்க்க வர முடிகிறது. அதன் காரணமாக முன்னாள் வீரர்களான சச்சின், டிராவிட், லட்சுமணன் போன்ற வீரர்களை அடுத்து தற்போதைய வீரர்களால் ஸ்பின்னர்களை சரியாக கையாளத் தெரியவில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் குறித்தும், இந்திய ஸ்பின்னர்கள் குறித்தும் விமர்சிக்கும் வகையில் பேசியுள்ள முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கூறுகையில் : ஒவ்வொரு நாடும் தங்களது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவில் நமது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் முன்பு போல நமது பேட்ஸ்மேன்கள் பல மணி நேரம் நின்று 250-300 ரன்கள் அடித்த காலம் எல்லாம் போய்விட்டது. தற்போதைய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னிற்கு எதிராக தடுமாறுகிறார்கள்.

இதையும் படிங்க :

12 வருடங்கள் 18 தொடர்கள்.. உலகிலேயே அவங்களுக்கு சமமான இந்தியாவில் இதை செஞ்சது பெரிய சாதனை.. டிம் சௌதீ

அதேபோன்று ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் தான் இந்த தலைமுறையின் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள். இவர்கள் சென்று விட்டால் அடுத்த தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இனி வரமாட்டார்கள் என்பதே உண்மை. ஏனெனில் தற்போதைய தேர்வாளர்கள் மிஸ்ட்ரி பந்துவீச்சாளர்களையும், பல்வேறு வெரியேஷங்களையும் வைத்துக் கொண்டுள்ள பந்து வீச்சாளர்களை தான் தேடுகிறார்கள். அதனால் நிச்சயம் ஸ்பின்னர்களின் தரம் குறைந்து வருவதாக தான் நினைப்பதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement