பாண்டியா அளவுக்கு கிடையாது.. ஆஸியில் அடி வாங்காம இருக்க அதை யூஸ் பண்ணிக்கோங்க.. எம்எஸ்கே பிரசாத்

MSK Prasad
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது. அதே போல இம்முறையும் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை இந்தியா பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சொல்லப்போனால் தற்போது நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தோற்றுள்ள இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலிய தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. வரும் நவம்பரில் துவங்கும் அந்தத் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொடரில் முகமது ஷமி காயத்தால் தேர்வு செய்யப்படாதது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பாண்டியா கிடையாது:

அத்துடன் பொதுவாகவே வேகத்துக்கு சாதகமான மைதானங்களை கொண்ட ஆஸ்திரேலியாவில் அசத்துதற்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் தேவை. ஆனால் இந்தியாவிடம் அது போன்ற வீரர் இல்லாத நிலையில் கடந்த முறை அசத்திய சர்துள் தாக்கூரை தேர்ந்தெடுக்காத பிசிசிஐ நித்திஷ் ரெட்டியை தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் ஓரளவு அசத்திய அவர் சமீபத்திய வங்கதேச டி20 தொடரில் அறிமுகமாகி ஆல் ரவுண்டராக வெற்றியில் பங்காற்றினார்.

அதன் காரணமாக உடனடியாக ஆஸ்திரேலிய தொடரில் விளையாட அவர் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா போல் 140 கி.மீ வேகத்தில் வீசும் திறமை நித்திஷ் ரெட்டியிடம் இல்லையென்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார். எனவே ஆஸ்திரேலியாவில் அவர் அடி வாங்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் பிரசாத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அனுபவம் குறைவு:

அதனால் இந்தியா ஏ அணி விளையாட உள்ள பயிற்சிப் போட்டி அனுபவத்தை பயன்படுத்தி அவர் அசத்த வேண்டுமென்றும் பிரசாத் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியதற்கு பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் நித்திஷ் ரெட்டி அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கிறேன். அதனாலேயே அவருக்கு சமீபத்தில் இந்திய நிர்வாகம் வாய்ப்பு கொடுத்தது. ஹர்திக் பாண்டியா போல அவர் 8 – 10 ஓவர்கள் வீசுவார் என்று அவர்கள் கருதுகின்றனர்”

இதையும் படிங்க: இந்தியா மாதிரி பாகிஸ்தான் இல்ல.. 6 மாதத்தில் வெளியேறிய 2011 உ.கோ வென்ற கேரி கிர்ஸ்டன்.. புதிய கோச் அறிவிப்பு

“ஆனால் அவர் 140 வேகத்தில் வீசக்கூடிய பாண்டியா கிடையாது. அவர் 125 – 130கி.மீ வேகத்தில் மட்டுமே வீசுகிறார். அது போக உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் போதுமான அளவு விளையாடவில்லை என்பது கவலைக்குரிய விஷயம். உள்ளூரில் அவர் 25 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். அப்படிப்பட்ட அனுபவமற்ற அவரை ஹர்திக் பாண்டியா இடத்தில் விளையாட தேர்ந்தெடுத்துள்ளது எனக்கு கவலையளிக்கிறது. இருப்பினும் இந்தியா ஏ அணி விளையாடும் பயிற்சி போட்டிகளை அவர் பயன்படுத்தி அசத்துவார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement