- Advertisement -
இந்திய கிரிக்கெட்

12 வருஷ தோல்வி.. அதனால இப்போதையை இளம் இந்திய பசங்க நாட்டுக்காக விளையாட விரும்பல.. எம்எஸ்கே பிரசாத்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா தற்சமயத்தில் டாப் அணியாக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. இதற்கு ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமான பங்காற்றி வருகிறது. ஏனெனில் அதில் ஒவ்வொரு வருடமும் நிறைய தரமான வீரர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள். அதனால் ஒரே சமயத்தில் இந்தியாவுக்காக 2 கிரிக்கெட் அணிகளை விளையாட வைக்கும் அளவுக்கு நிறைய தரமான வீரர்கள் கிடைக்கிறார்கள்.

ஆனால் ஐபிஎல் தொடரால் சில பாதகங்களையும் இந்தியா சந்தித்து வருகிறது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பளத்தை வாங்கிக்கொண்டு இங்குள்ள மைதானங்கள், இந்திய வீரர்களின் பலம் பலவீனங்களை தெரிந்து கொள்கிறார்கள். அதை வைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அவர்கள் திட்டங்களை வகுத்து வெற்றி காண்கிறார்கள்.

- Advertisement -

ஐபிஎல் பாதகம்:

அதே போல ஒரு காலத்தில் இந்தியாவுக்கு விளையாட வேண்டுமெனில் முதலில் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் தொடர்ந்து விளையாட வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் ஓரிரு வருடங்கள் அசத்தினாலே வாய்ப்பு கிடைக்கிறது. கூடவே கோடிக்கணக்கில் சம்பளமும் கொடுக்கப்படுகிறது. அதனால் இப்போதுள்ள இளம் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடுவதை விட பணத்துக்காக ஐபிஎல் தொடரில் விளையாடினால் போதும் என்று விரும்புவதாக முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் வேதனை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த சில வருடங்களாக அல்ல. ஒரு 14 – 15 வருடங்களாக அதாவது ஐபிஎல் வந்ததிலிருந்து நமது வீரர்களின் மனநிலை மெதுவாக உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு மாறியுள்ளது. அந்த நிலைமை வந்ததிலிருந்தே பெரும்பாலான வீரர்கள் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடி எப்படியாவது ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள்”

- Advertisement -

இந்தியாவுக்கு தோல்விகள்:

“இந்தியாவுக்காக விளையாட விரும்புவதில்லை. அது மிகப்பெரிய எச்சரிக்கை மணி. கடந்த சில வருடங்களுக்கு முன் அண்டர்-19 உலகக் கோப்பை இந்திய அணியின் முகாமில் கேள்வி ஒன்று கேட்டோம். வருங்காலத்தில் உங்களுடைய இலக்கு என்ன என்பது பற்றி கேட்டோம். அதில் 80% வீரர்கள் ஐபிஎல் என்று எழுதினார்கள். இந்திய அணிக்கு விளையாடுவதே முதல் இலக்கு என்று பெரும்பாலானவர்கள் தெரிவிக்கவில்லை”

இதையும் படிங்க: 35% கொழுப்பு இருக்குன்னு கழற்றி விடலாமா.. அவரை பாருங்க.. பிரிதிவிக்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு

“அந்த வகையில் தற்போது அனைத்தும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை நோக்கி நகர்ந்துள்ளது. அதன் காரணமாக சுழல் பந்துகளுக்கு எதிராக விளையாடும் கலையை வீரர்கள் இழந்து வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய கடினமான கைகளால் லைனில் அதிரடியாக அடிக்க விரும்புகிறார்கள். அதனாலேயே தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்ததை போன்ற முடிவுகளை நாம் பார்க்கிறோம்” என்று கூறினார்.

- Advertisement -