ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ஏப்ரல் 3-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 214 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 குவித்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததிருந்தது. இந்த தோல்வி சி.எஸ்.கே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.
தோனி என்னை அப்படி கூப்பிட்டதில் மகிழ்ச்சி : ஆயுஷ் மாத்ரே
ஆனாலும் அந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான ஆயுஷ் மாத்ரே 48 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 94 ரன்கள் குவித்து அசத்தினார்.
நடப்பு சீசனில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறிய வேளையில் அவருக்கு பதிலாக அணிக்குள் வந்த 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரே வந்தது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார்.
நேற்று பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் அரைசதம் அடித்த அவர் சிஎஸ்கே அணிக்காக மிக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியதோடு இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து விளையாடும் திறமையுடைய அற்புதமான வீரராக அனைவராலும் பாராட்டப்படுகிறார்.
இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் தன்னை நேரில் அழைத்த தோனி எவ்வாறு அழைத்தார் என்பது குறித்து ஆயுஷ் மாத்ரே மகிழ்ச்சி தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நேற்றைய போட்டி முடிந்த பின்னர் என்னை மகிபாய் “சாம்பியன்” என்று அழைத்தார். ஆனால் அவர் ஏன் என்னை அப்படி அழைத்தார் என்று தெரியவில்லை. இருந்தாலும் அவர் அப்படி என்னை அழைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது என ஆயுஷ் மாத்ரே கூறியுள்ளார்.
இதையும் படிங்க : 6 பந்தில் 6 சிக்ஸ்.. 2023இல் சொன்னதை செய்த ரியான்.. கெய்ல், பொல்லார்ட், ரிங்குவை முந்தி சரித்திர சாதனை
17 வயதான மும்பையைச் சேர்ந்த வீரரான ஆயுஷ் மாத்ரே ஏற்கனவே மெகா ஏலத்திற்கு முன்னதாக சென்னை அணியின் ட்ரையல்ஸ்க்கு வந்து அசத்திய வேளையில் அவரை மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுக்க தவறினாலும் தற்போது ருதுராஜ் கெய்க்வாடுக்கு மாற்று வீரராக அவரை அணிக்குள் கொண்டு வந்து பெரிய வீரராகவும் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.



