MS Dhoni : மைதான உயரத்திற்கு இரண்டு ராட்சஷ சிக்ஸரை அடித்து ரசிகர்களை மிரள வைத்த தோனி – வீடியோ

Dhoni
- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 131 ரன்களை மட்டுமே அடித்தது. அதிலும் குறிப்பாக தோனி பந்துகள் குறைவாக இருந்ததால் தோனியால் அதிரடியாக ஆடமுடியவில்லை. இருப்பினும், குறிப்பாக 2 ராட்சஷ சிக்ஸரை தோனி அடித்தார். இந்த சிக்ஸர் மைதான உயரத்திற்கு சென்றது. இதனை கண்ட சென்னை ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் குவாலிபயர் 1 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை 131 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ராயுடு 42 ரன்களும், தோனி 37 ரன்களை குவித்தனர். சாகர் 4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பிறகு 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார். மேலும் ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்.

Advertisement