ரெய்னாவை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுகிறாரா சென்னை அதிரடி வீரர் ? சோகத்தில் சென்னை ரசிகர்கள் !

MSdhoni
- Advertisement -

11வது ஐபிஎல் சீசன் கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது.இந்த ஐபிஎல் தொடர் தொடங்கப்படுவதற்கு முன்னரே ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் பலர் காயம் காரணமாகவும் இன்னபிற காரணங்களாலும் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினர்.
dhoni

அதிலும் இரண்டாண்டு தடைக்கு பின்னர் தோனி தலைமையிலான சென்னை அணிக்கு சோதனை மேல் சோதனை ஐபிஎல் தொடர் தொடங்கிய போதிலிருந்தே தொடர்கின்றது.மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார் சென்னை அணியின் கேதார் ஜாதவ்.

- Advertisement -

கொல்கத்தா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயத்தினால் சுரேஷ்ரெய்னா பஞ்சாப் அணிக்கான போட்டியில் விளையாடாமல் ஓய்வெடுத்து வருகின்றார்.அதிரடி வீரரான டூப்ளெசிஸ் ஆரம்பம் முதலே காயம் காரணமாக சென்னை அணிக்காக விளையாடிடாத நிலையில், தன் தந்தை இறந்து விட்டதால் தென்ஆப்பிரிக்காவிற்கு சென்றுவிட்டார் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி.

dhoni1

இப்படி வரிசையாக முக்கிய வீரர்கள் போட்டியிலிருந்து விளையாடாமல் வெளியேறி வர முக்கிய வீரர்கள் இல்லாமல் தவித்துவரும் சென்னை அணிக்கு தற்போது பேரதிர்ச்சி காத்திருக்கின்றது.ஆம் சென்னை அணியின் கேப்டனான தல தோனி முதுகு வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் விளையாடிட மாட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியின்போது கூட முதுகுவலியால் துடித்த தோனிக்கு பேட்டிங்கின் போது மருத்துவர் சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.தொடர் முதுகு வலியின் காரணமாக ஓய்வு தேவை என்பதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி தோனி அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகமே என்றும், அப்படி அவர் அடுத்த போட்டியில் விளையாடிடாத பட்சத்தில் சென்னை அணியின் ஆல்ரவுண்டரான ஷேன்வாட்சன் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement