விராட், தோனியே பாராட்டிருக்காங்க, என் பையன் கண்டிப்பா இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பான் – இளம் வீரரின் தந்தை

Umran Malik Last Over
- Advertisement -

ஐபிஎல் என்பது இந்தியாவின் மூலை முடுக்கில் அடையாளம் தெரியாமல் தூசியடைந்து கிடக்கும் தரமான இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுதியான வாய்ப்புகளைக் கொடுத்து பட்டை தீட்டி உலகத்தரம் வாய்ந்தவராக அடையாளம் காட்டும் ஒரு உன்னதமான கிரிக்கெட் தொடராகும். அந்த வகையில் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் அதிவேகமான பந்துகளை வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரும் உம்ரான் மாலிக் இந்த வருடம் அதைவிட மின்னல்வேக பந்துகளை வீசி அனைவரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

Umran Malik

சாதாரணமாகவே 145 கி.மீ வேகப்பந்துகளை வீசும் திறமை கொண்ட இவர் கடந்த வருடம் ஒருசில போட்டிகளில் அந்த திறமையை வெளிப்படுத்திய காரணத்தால் எந்தவித யோசனையுமின்றி 4 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஹைதராபாத் அணி நிர்வாகம் தக்க வைத்தது. அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இந்த வருடம் செயல்பட்டு வரும் அவர் சென்னைக்கு எதிரான போட்டியில் 153.3 கி.மீ வேகப்பந்தை வீசி ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற சாதனை படைத்துள்ளார். இத்தனைக்கும் 22 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் ஆரம்பகட்ட போட்டிகளில் வேகத்திற்கு ஈடாக ரன்களை வாரி வழங்கியதால் விமர்சனங்களுக்கு உள்ளானார்.

பெருமைமிகு தந்தை:
இருப்பினும் அதன்பின் வேகத்தில் விவேகத்தை புகுத்திய அவர் சமீபத்திய போட்டிகளில் குறைந்த ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளை எடுக்க தொடங்கியுள்ளார். குறிப்பாக பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை வீசிய அவர் 1 ரன் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை எடுத்து மெய்டன் ஓவரா வீசி ஜாம்பவான் லசித் மலிங்காவின் சாதனையை சமன் செய்தார். இப்படி அசத்தலாக செயல்படத் தொடங்கியுள்ள அவரை வேகத்திற்கு சாதகமாக இருக்கக்கூடிய ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற பல முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Umran

இருந்தாலும் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இருக்கும் அவருக்கு அவசரப்பட்டு வாய்ப்பு கொடுக்க கூடாது என்ற பேச்சு நிலவி வரும் நிலையில் இந்த அளவுக்கு தனது மகன் வளர்ந்துள்ளது தமக்கு மிகவும் பெருமையாக உள்ளதென்று இம்ரான் மாறி தந்தை அப்துல் ரசித் தெரிவித்துள்ளார். ஜம்முவில் உள்ள ஒரு நகரத்தில் சாதாரண காய்கறி பழக்கடை நடத்துபவரின் மகனான உம்ரான் மாலிக் தனது அபார செயல்பாடுகளால் தந்தைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இது பற்றி அவரின் தந்தை அப்துல் ரசீத் பேசியது பின்வருமாறு. “அன்றைய நாளில் எனது பக்கத்து கடைக்காரர்கள் என்னிடம் வந்து ‘அப்துல் பாய் உங்களது மகன் அதிசயம் நிகழ்த்தியுள்ளார். அவர் வெறும் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்’ என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்கள். அதற்கு சிரித்தபடி அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்தேன். அதன்பின் எனக்கு போன் செய்த எனது மகன் என்னிடம் பேசுவதற்கு முன்பாகவே ‘மகனே நீ என்னை இந்த நாளில் மிகவும் பெருமை படுத்தி விட்டாய்’ என்று கூறினேன்”

Umran Malik Father

“சொல்லப்போனால் நான் வசிக்கும் மார்க்கெட் மட்டுமல்லாது மொத்த ஜம்முவிலும் இம்ரான் என்னை புகழ் படுத்தியுள்ளதால் எனது மகனால் கண்டிப்பாக நான் பெருமை அடைகிறேன். அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் என அடம்பிடித்தார். அதற்காக கடுமையாக பயிற்சி எடுத்த அவர் ஜம்முவில் உள்ள சைன்ஸ் கல்லூரியில் டென்னிஸ் பந்துகளை தண்ணீரில் நனைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகத்தில் பந்துவீச பயிற்சி எடுத்தார். அதன்பின் உள்ளூர் போட்டிகளில் அசத்தி நிறைய பரிசுகளையும் கோப்பைகளையும் வென்று புகழ் பெற்ற அவரை லோக்கல் போட்டிகளில் எங்க டீமுக்கு விளையாட வேண்டும் என்று அவர் வயது இளைஞர்கள் சண்டை போட்டுக்கொள்வார்கள்”

“அந்த சமயத்தில் அவரை கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தடுக்க முயற்சித்தேன். ஆனால் அவர் என்னிடம் தொடர்ந்து விளையாட கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அதேபோல் இர்பான் பதான் சார் எனது மகனின் வளர்ச்சியில் மிகப் பெரிய பங்காற்றியுள்ளார். பாகிஸ்தான் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் போல இவர் பந்து வீசுகிறார் என்பதால் கண்டிப்பாக நல்ல எதிர்காலம் உள்ளது என்று அவர் அடிக்கடி கூறியதுடன் அவரை சரியான வழியில் வழிநடத்தியது இன்னும் நினைவில் உள்ளது” என்று கூறினார்.

umran 3

தோனி, விராட் பாராட்டு:
இந்த வருடம் 7 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை எடுத்துள்ள உம்ரான் மாலிக் 90% பந்துகளை 140 கி.மீ க்கும் மேல் வீசியுள்ளார். அப்படிப்பட்ட அவரை கடந்த வருடமே “இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது” என்று அப்போதைய கேப்டன் விராட் கோலி வெளிப்படையாக பாராட்டியிருந்தார். மேலும் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனியும் தனது மகனை பாராட்டியுள்ளதாக அப்துல் ரசித் தெரிவித்துள்ளார். எனவே இன்றில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் தனது மகன் இந்தியாவிற்காக விளையாடி பெருமை சேர்ப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர் அதுதான் தனது கனவு என மெய்சிலிர்த்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “தோனி ஒரு லெஜெண்ட், விராட் கோலி ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட்டர் என்று அவர்களைப் பார்த்து பேசியதை வைத்து உம்ரான் மாலிக் என்னிடம் அடிக்கடி கூறுவார். அவர்கள் உம்ரானுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று தெரிவித்ததாகவும் எனது மகன் என்னிடம் கூறியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களைப் போன்ற 2 ஜாம்பவான்களிடமிருந்து இதுபோன்ற பொன்னான வார்த்தைகளை கேட்பது பெருமையாகும். இந்தியாவிற்காக எனது மகன் விளையாட வேண்டும் என்பதே எனது ஒரே கனவாகும்.

இதையும் படிங்க : விராட் கோலி சச்சினும் ஆகமுடியாது, பார்முக்கும் திரும்ப முடியாது – வைரலாகும் பாக் வீரரின் 2021 கணிப்பு வீடியோ

தற்போது அவரிடம் நல்ல தன்னம்பிக்கையும் திறமையும் உள்ளதால் என்றாவது ஒருநாள் அவர் உலகக்கோப்பையில் விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.

Advertisement