நான் மென்டார் மட்டும் இல்ல. அதுக்கும் மேல. இந்திய அணிக்காக புதிய பொறுப்பை ஏற்ற தல தோனி – வேறலெவல்

Dhoni
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் முடிவடைந்த சில நாட்களிலேயே டி20 உலகக் கோப்பைத் தொடரானது துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக பங்கேற்ற தோனி கோப்பையை கைப்பற்றிய பின்னர் தற்போது இந்திய அணியுடன் ஆலோசகராக இணைந்துள்ளார். முதல் முறையாக ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணியில் ஒரு பதவியில் இணைந்திருக்கும் தோனி ஒரு பெரிய தொடரில் இந்திய அணி வெற்றி பெற அவரது ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

தோனி இந்திய அணியின் ஆலோசகராக அறிவிக்கப்பட்ட பின்னர் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் தோனியின் அனுபவமும், அவருடைய யோசனைகளும் நிச்சயம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்பதனால் ரசிகர்கள் மத்தியில் அவரது இந்த புதிய பதவிக்கு வரவேற்பு பெருகியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே தற்போது நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு கீப்பிங் பயிற்சி வழங்கியது மட்டுமின்றி ஆலோசனைகளையும் கொடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு அவரது ஆலோசனைகளை தவிர்த்து மேலும் ஒரு வேலையையும் தோனி வலைப்பயிற்சியில் செய்து வருகிறார். அது குறித்த புகைப்படங்களை பி.சி.சி.ஐ தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி பயிற்சியின் போது இந்திய அணிக்கு த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்டாக அவர் செயல்பட்டு வருகிறார். அதாவது பேட்ஸ்மேன்களுக்கு பந்தை வெவ்வேறு ஏரியாக்களில் வீசி அவர்களுக்கு பேட்டிங் செய்யவும் தோனி உதவி புரிந்து வருகிறார். அவரின் இந்த செயல் தற்போது வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : என்ன கேள்வி இது ? நான் தான் ஏற்கனவே பதில் சொல்லிட்டேன் இல்ல – பத்திரிகையாளர் சந்திப்பில் கோபப்பட்ட கோலி

ஏனெனில் அணியின் ஆலோசகராக அவர்களுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்காமல் களத்தில் இறங்கி பந்துவீசி பேட்டிங் பயிற்சியும் கொடுப்பது பார்ப்பதற்கு அருமையாக உள்ளது என ரசிகர்களும் இது குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement