என்ன கேள்வி இது ? நான் தான் ஏற்கனவே பதில் சொல்லிட்டேன் இல்ல – பத்திரிகையாளர் சந்திப்பில் கோபப்பட்ட கோலி

Kohli-2 Press
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த டி20 உலகக் கோப்பையை கைப்பற்றும் அணியாக உள்ளது என்று பலரும் தங்களது கருத்துக்களைக் கூறிவருகின்றனர். இந்திய அணியின் கேப்டன் கோலியும் இந்த உலகக்கோப்பை தொடருடன் தான் டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்தார். இதன் காரணமாக நிச்சயம் இந்த உலகக் கோப்பையை வென்று அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

pak 1

- Advertisement -

அதன்படி தற்போது டி20 உலக கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்து தற்போது சூப்பர் 12- சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இரு அணி கேப்டன்களும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அப்படி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது நிருபர் எழுப்பிய ஒரு கேள்வியால் கடும் கோபம் அடைந்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பத்திரிகையாளர் சந்திப்பின் போது அந்த நிருபர் டி20 உலக கோப்பை தொடர் முடிந்த பின்னர் நீங்கள் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று கூறியிருந்தீர்கள். அதற்கு என்ன காரணம் ? அணி நிர்வாகத்துடன் ஏற்பட்டுள்ள மோதல் தான் காரணமா ? இது உண்மைதானா ? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

pandya

இந்த கேள்வியை அடுத்து உடனடியாக கோபமடைந்த கோலி பதிலுக்கு தனது ஆக்ரோஷமான கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் ஏன் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என்பதை நான் ஏற்கனவே தெளிவாக கூறி விட்டேன். என்னால் முடிந்த அளவுக்கு அதற்கு விளக்கம் கொடுத்த பின்பும் அதை விமர்சிப்பவர்கள் பறித்து பற்றி எனக்கு கவலை கிடையாது .

- Advertisement -

இதையும் படிங்க : போனது போகட்டும் அதப்பத்தி யோசிக்கல. இம்முறை விடமாட்டோம் – இந்திய போட்டிக்கு முன்னர் பாபர் அசாம் பேட்டி

என்னுடைய சிந்தனை எல்லாம் இப்போது டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் அதில் மட்டும்தான் உள்ளது. எனவே அது குறித்த கேள்வியை கேளுங்கள் என்று கோபமாக பதிலளித்தார். கோலியின் இந்த பதிலால் அந்த சந்திப்பில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் மேலும் சில கேள்விகளுக்கு விடையளித்த பின்னர் கோலி வெளியேறினார்.

Advertisement