8-10 வருஷமா எங்க டீமோட ஸ்ட்ரென்த் இதுதான். அதுவே சி.எஸ்.கே அணியின் வெற்றிக்கு காரணம் – தோனி பெருமிதம்

Dhoni

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 23வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்களை மட்டுமே அடிக்க சென்னை அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.

CSKvsSRH

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : இந்த போட்டியில் எங்களது பேட்டிங் சிறப்பாக இருந்தது. அதே வேளையில் எங்களது பவுலிங் பலவீனமாக இருந்தது என்று நான் கூறவில்லை. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்காது என்று நினைத்தோம்.

ஆனால் பந்து பேட்க்கு நன்றாக வந்ததால் ஸ்பின்னர்கள் இந்த கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. இந்த போட்டியில் டியூ இல்லாததும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. 170 ரன்கள் என்பது அடிக்கக்கூடிய இலக்குதான் அதனை சிறந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களது வீரர்கள் அடித்து கொடுத்தனர்.

faf 1

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு இருந்த பிரச்சனை இந்த வருடம் இல்லை அந்த அளவிற்கு சிறப்பாக துவக்க வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் ஆரம்பத்திலேயே நாங்கள் ஒரு செட்டிலான அணியை கொண்டுள்ளதால் எங்களால் சிறப்பாக விளையாட முடிகிறது. கடந்த 8 முதல் 10 வருடங்களாக நாங்கள் அணியில் பெரிதாக வீரர்களை மாற்றவில்லை அதனால் எங்களது அப்புரோச் எப்பொழுதும் ஒரே மாதிரி தான். அதனால் நாங்கள் ஒரு அணியாக இந்த தொடரில் வெற்றிகளை பெற்று வருகிறோம்.

- Advertisement -

faf

வீரர்களும் அதிகளவு போட்டியை விளையாடி உள்ளனர். அதுமட்டுமின்றி விளையாடாமல் வெளியில் இருக்கும் வீரர்களும் நல்ல மனநிலையில் உள்ளனர். வாய்ப்பு கிடைக்கும்போது வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் ஆரோக்கியமான நிலையும் எங்களது அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைகிறது என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.