ராஜஸ்தான் அணிக்கு எதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இதுவே காரணம் – தோனி மகிழ்ச்சி

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 188 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டூபிளெஸ்ஸிஸ் 33 ரன்களையும், ராயுடு 27 ரன்களை குவித்தனர்.

- Advertisement -

சென்னை அணி வீரர்கள் யாருமே பெரிய அளவில் ரன்களை குவிக்க வில்லை என்றாலும் களமிறங்கிய அனைவரும் கணிசமான ரன் குவிப்பை வழங்கியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188 ரன்களை குவித்தது அதனை தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி துவக்கத்தில் மனன் வோரா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை அடுத்தடுத்து இழந்த நிலையில் பட்லர் மற்றும் துபே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருப்பினும் 12 ஆவது ஓவரில் பட்லர் மற்றும் துபே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த ஓவரை வீசிய ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு ஒரு பெரிய திருப்புமுனையை கொடுத்தார். அதன் பின்னர் வந்த யாரும் பெரிய அளவு ரன் குவிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே குவித்தது இதன் மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்று பெற்று அசத்தியுள்ளது.

csk vs rr

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கேப்டன் தோனி கூறுகையில் : பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் எங்களது அணியில் 6 பவுலரும் சிறப்பாக பந்து வீசுவது அருமையான ஒரு விஷயம். இந்த மைதானத்தில் வழக்கத்தைவிட இன்று சற்று டியூ குறைவாக இருந்தது. மேலும் இந்த போட்டியில் எவ்வளவு ரன்களை நாங்கள் குவிக்க முடியுமோ அவ்வளவு ரன்களை குவிக்க ஆசைப்பட்டோம். ஏனெனில் டி20 கிரிகெட் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் மாறி இருக்கிறது. கடந்த ஆண்டு பந்துவீச்சாளர்களுக்கு ஒரு மோசமான ஆண்டாக அமைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இது போன்ற மைதானங்களில் எங்களது பந்து வீச்சாளர்கள் பந்துவீச மிகவும் விரும்புகின்றனர் என தோனி கூறினார்.

sam curran

மேலும் அதுமட்டுமின்றி பவர் பிளே 6 ஓவர்களை சாம் கரன் மற்றும் தீபக் சாகர் மட்டுமே வீசியது ஏன் வீசினார்கள் என்பது குறித்து பேசிய தோனி : நான் எப்பொழுதுமே அந்த தருணத்தில் எது அணிக்கு தேவையோ அதை பற்றி மட்டுமே தான் யோசிப்பேன் என்றும் அப்பொழுது தீபக் சாகர் மற்றும் சாம் கரன் ஆகியோர் சிறப்பாக பந்துவீசியதாக தோன்றியதால் தொடர்ச்சியாக ஆறு ஓவர்களை கொடுத்தேன் என்றும் கூறினார். பவர்பிளே ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்ததால் இந்த போட்டியில் வெற்றி பெறவும் அது வழிவகுத்தது என தோனி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement