CSK vs DC : பெருசா எதும் பண்ண வேணாம். இதை மட்டும் பண்ணுங்க போதும் – வெற்றிக்கு பிறகு கெத்தாக பேசிய தோனி

MS-Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

CSK vs DC

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 79 ரன்களையும், டேவான் கான்வே 87 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே குவித்ததால் 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி இந்த போட்டியில் அபார வெற்றி பெற்று இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Conway and Gaikwad

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறுகையில் : வெற்றிக்கான எந்த ரகசியமும் கிடையாது. நல்ல வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உண்டான சரியான இடத்தை வழங்கினாலே போதும் வெற்றி தானாக கிடைக்கும். அதோடு வீரர்கள் எந்தெந்த இடங்களில் பலமாக இல்லையோ அதனை சரி செய்து முன்னேற்றத்தை காண வேண்டும்.

- Advertisement -

அந்த வகையில் எங்களது அணி வீரர்கள் மிகச் சிறப்பான முறையில் முன்னேற்றத்தை கண்டுள்ளனர். எங்களது அணியின் நிர்வாகமும் எங்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதால் எங்களால் சிறப்பாக செயல்பட முடிகிறது. குறிப்பாக தற்போது பந்துவீச்சாளர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பதிரானா இயற்கையிலேயே மிகச்சிறந்த பவுலர். அவர் கடைசி நேரத்தில் சிறப்பாக பந்துவீசுகிறார்.

இதையும் படிங்க : KKR vs LSG : வெறித்தனமாக போராடிய ரிங்கு – சிஎஸ்கே’வுக்கு கிடைத்த மிகப்பெரிய உதவி – லக்னோ பிளே ஆஃப்’க்கு சென்றது எப்படி?

ஆனால் தற்போது துஷார் தேஷ்பாண்டே டெத் ஓவர் பவுலிங்கில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறார். தற்போது அனைத்து வீரர்களின் பங்களிப்பும் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதனால் எங்களது அணி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தோனி மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement