டி20 உலககோப்பை இறுதிபோட்டியை இப்படித்தான் பார்த்தேன்.. மனம் திறந்த தல தோனி – விவரம் இதோ

MS-Dhoni
- Advertisement -

இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாட்டில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணியானது டி20 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி இந்த தொடரை வென்றதன் மூலம் மீண்டும் ஐசிசி டி20 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.

இறுதிப்போட்டியை இப்படித்தான் பார்த்தேன் :

இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா, விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் சூர்யா குமார் யாதவ் ஆகியோர் மிக முக்கிய காரணமாக இருந்தனர். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை தான் எவ்வாறு பார்த்தேன் என்று குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி மனம் திறந்த சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசி அவர் கூறுகையில் : இந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை எனது வீட்டில் நான் எனது நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கியதும் என் நண்பர்கள் அனைவரும் எழுந்து சென்று விட்டனர்.

மேலும் அதை பார்க்காதே எழுந்து வா இந்தியாவுக்கு எல்லாம் முடிந்தது என்று கூறினர். ஆனால் நான் ஒருவன் மட்டுமே போட்டியை முழுவதுமாக பார்த்தேன். எப்பொழுதுமே கிரிக்கெட்டை பொருத்தவரை கடைசி பந்து முடியும் வரை எதுவும் முடிந்து விட்டதாக நினைப்பது தவறு என்று கூறினேன்.

- Advertisement -

ஆனால் அவர்கள் என்னை நம்பவில்லை. அதன் பின்னர் நான் சொல்வது சரிதான் என்பதை போட்டி முடிந்ததும் அவர்கள் புரிந்து கொண்டனர். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் அது எப்போது நடக்கும் என்பதை பொறுத்திருந்து யாரும் பார்க்கவில்லை.

இதையும் படிங்க : 12 வருசத்துல 1.. இப்படி சொல்லவா நீங்க கேப்டனா இருக்கீங்க.. ரோஹித் சர்மாவின் கருத்தை விளாசும் ரசிகர்கள்

ஆனால் நான் கடைசி வரை ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆர்டர் சற்று வலுவில்லாமல் இருந்ததால் எனக்குள் இந்தியா ஜெயிக்கும் என்ற திடமான நம்பிக்கை இருந்ததாகவும் தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement