இவர் இப்படி பேட்டிங்கில் அசத்துவார்னு தெரிஞ்சிருந்தா நிறைய வாய்ப்புகள் கொடுத்திருப்பேன் – தோனி ஓபன் டாக்

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் இல்லாத வகையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து ப்ளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி விட்டது. இந்த மோசமான செயல்பாட்டிற்கு காரணம் பல கூறப்படுகிறது. சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் தான் இந்த தொடர் தோல்விகளுக்கு எல்லாம் காரணம் என்றும் கூறப்படுகிறது .

- Advertisement -

மேலும் தோனியின் பல முடிவுகளில் அணி நிர்வாகத்திற்கு எதிர்த்து இருந்ததாக செய்திகள் வந்துள்ளது. இத்தனை வருடம் எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணியை அழைத்துச் சென்ற தோனி இந்த வருடம் என்ன தவறு செய்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தோல்வி வந்தவுடன் இளம் வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அனைவரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஆனால் தோனியோ சில போட்டிகளுக்கு முன்னர் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இளம்வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை அதனாலேயே அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் அந்த அணியின் இளம்வீரரான பேட்ஸ்மேன் ருத்துராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் 51 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.

gaikwad

இவர் உண்மையில் ஒரு துவக்க வீரர் இந்த போட்டிக்கு முன்பு மூன்று போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் மொத்தம் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் காரணமாக அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஆனால் அவரின் அபாரமான இந்த ஆட்டத்திற்கு பிறகு பேசிய தோனி : முன்னரே இவ்வாறு ஆடி இருந்தால் அவருக்கு பல வாய்ப்புகள் கொடுத்திருப்போம்.

Gaikwad 3

அவரைப் பற்றி சரியாக தெரிந்து இருக்கும் இதற்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுக்கத் தவறிவிட்டோம் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். தோனி ஒருவேளை துவக்கம் முதலே ருதுராஜை துவக்க வீரராக ஆடவிட்டு இருந்தால் சென்னை அணி இன்று ப்ளே ஆப் சுற்றுக்கு சென்றிருக்கும் என்றும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement