அதுக்கான வேலையை இப்போவே ஆரம்பிச்சாச்சு.. மாஸ் கம்பேக் குடுப்பது பற்றி – தல தோனி பேட்டி

MS Dhoni
- Advertisement -

மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் மற்றும் 9 தோல்விகள் என வெறும் 6 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது. அதுமட்டும் இன்றி ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்த சென்னை அணி அடுத்ததாக ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான சம்பிரதாய போட்டிகளில் விளையாட இருக்கிறது.

அடுத்த ஆண்டு கம்பேக் பற்றி பேசிய : எம்.எஸ் தோனி

அந்த வகையில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62-ஆவது லீக் போட்டியானது டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தங்களது அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 43 ரன்களையும், டேவால்டு பிரேவிஸ் 42 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அளித்துள்ள பேட்டி ரசிகர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

அந்த வகையில் இன்றைய டாசின் போது பேசிய மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணி கொடுக்கப்போகும் கம்பேக் குறித்து பேசியிருந்தார். அந்தவகையில் தோனி கூறுகையில் : நாங்கள் அடுத்த ஆண்டிற்கான பிராசஸை ஏற்கனவே ஆரம்பித்து விட்டோம். அதிலும் குறிப்பாக பேட்டிங்கில் அதிரடியாக விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் கடந்த சில போட்டிகளாகவே அதிரடியான பேட்ஸ்மேன்களை அணிக்குள் கொண்டு வந்து அந்த காம்பினேஷனை உருவாக்கி வருகிறோம்.

- Advertisement -

பந்துவீச்சாளர்களை பொருத்தவரை பவர்பிளேவிற்கு பிறகு சிறப்பாக பந்துவீசும் ஒரு கூடுதல் பவுலரை கொண்டு வர வேண்டிய அவசியம் மட்டுமே உள்ளது. அதையும் கடைசி இரண்டு போட்டிகளாக செய்து வருகிறோம். எனவே ஏற்கனவே அடுத்த ஆண்டிற்கான பிராசஸை நாங்கள் துவங்கி விட்டோம். நிச்சயம் அடுத்த ஆண்டிற்கான காம்பினேஷனை சரியாக தகவமைத்து மிக வலுவான அணியாக திரும்புவோம் என்று தோனி கூறியிருந்தார்.

இதையும் படிங்க : என்னது அவுட்டானதால நான் அழுதேனா.. முதல் போட்டியில் நடந்தது இதுதான் – வைபவ் சூர்யவன்ஷி அளித்த பதில்

இதன் மூலம் நிச்சயம் அடுத்த ஆண்டு அதிரடியான இளம் வீரர்களை வைத்து சிஎஸ்கே அணி சிறப்பான கம்பேக் கொடுக்க தோனி தனது அணியை தயார் படுத்தி வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement