CSK vs KKR : அஜின்க்யா ரஹானேவின் இந்த அதிரடிக்கு காரணம் இதுதான் – தோனி அளித்த பதில் இதோ

Dhoni-and-Rahane
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-ஆவது லீக் போட்டியானது நேற்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியானது 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

CSK vs KKR MS Dhoni Moeen Ali Sivam dube

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ரகானே 71 ரன்களையும், கான்வே 56 ரன்களையும், சிவம் துபே 50 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 20 ஓவர்களில் முடிவில் எட்டு விக்கெட்டை இழந்து 186 ரன்கள் மட்டுமே குவித்ததால் 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணிக்காக விளையாடிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அஜின்க்யா ரஹானே 29 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 71 ரன்கள் குவித்து தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து மெல்ல மெல்லமாக ஓய்வு கட்டப்பட்ட அவரை சென்னை அணி தேர்வு செய்து பிளேயிங் லெவனில் சேர்த்ததிலிருந்து அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

Rahane CSK

இந்நிலையில் இப்படி ரஹானே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த என்ன காரணம் என்பது குறித்து நேற்றைய போட்டி முடிந்து சென்னை அணியின் கேப்டன் தோனி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ரகானே போன்ற வீரரிடம் உள்ள திறமை என்ன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அவரை நாங்கள் மிகவும் சுதந்திரமாக விளையாட அனுமதித்துள்ளோம். அதோடு அவருக்கு பிடித்த ஆர்டரான நம்பர் 3-ஆம் இடத்தில் அவரை விளையாட வைக்கிறோம். அதுமட்டும் இன்றி அணியில் உள்ள சூழ்நிலையையும் அவரை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதால் அவரால் சிறப்பாக விளையாட முடிகிறது.

இதையும் படிங்க : வீடியோ : தப்பு தான் மன்னிச்சுடுயா, களத்தில் செய்த தவறுக்காக சக வீரரிடம் மன்னிப்பு கேட்ட சிராஜ் – நடந்தது என்ன

அதேபோன்று சென்னை அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களின் இடத்திற்கு ஏற்ப தங்களது இடங்களையும் விட்டுக் கொடுப்பதால் அணி சரியான அணியாக அமைகிறது. அதனாலே எங்களால் வெற்றியும் பெற முடிகிறது என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement