இந்த சீசனில் முதல் முறையா இதை செய்ஞ்சும் நாங்க தோத்தது வருத்தமா இருக்கு.. தோல்விக்கு பிறகு – எம்.எஸ் தோனி பேட்டி

MS Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியானது நேற்று சென்னை கேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

பஞ்சாப் அணிக்கெதிரான தோல்வி குறித்து வருத்தம் தெரிவித்த தோனி :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது பஞ்சாப் கிங்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களை மட்டுமே குவித்தனர். சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக சாம் கரண் 88 ரன்களையும், பிரேவிஸ் 32 ரன்களையும் குவித்திருந்தனர்.

- Advertisement -

பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 72 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 54 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கூறுகையில் : உண்மையிலேயே இந்தப் போட்டியில் பேட்டிங்கில் நாங்கள் கடைசி நேரத்தில் கோட்டை விட்டுவிட்டோம். குறிப்பாக இந்த தொடரில் முதல் முறையாக நாங்கள் அதிக ரன்கள் அடித்தும் தோல்வியை சந்தித்துள்ளோம்.

- Advertisement -

ஆனாலும் இந்த ஸ்கோர் இந்த மைதானத்தில் போதுமானது கிடையாது என்று நினைக்கிறன். நாங்கள் இந்த போட்டியின் கடைசி நேரத்தில் இன்னும் கூடுதலான ரன் குவிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் சாம் கரண் மற்றும் பிரேவிஸ் ஆகியோரது பார்ட்னர்ஷிப் மிகச்சிறப்பாக இருந்தது. அவர்கள் கொடுத்த அந்த மொமென்ட்டதை அதன்பிறகு எங்களால் கொண்டு செல்ல முடியவில்லை. எங்களுடைய இன்னிங்சின் கடைசி 4 பந்துகளை நாங்கள் விளையாடவில்லை.

இதையும் படிங்க : 19.2 ஓவரில் 190 ரன்ஸ்.. சாம் கரண் மிரட்டியும் ஃபினிஷ் செய்யாத சிஎஸ்கே.. சஹால் வரலாற்று ஹாட்ரிக் சாதனை

அதேபோன்று 19 ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அந்த ஏழு பந்துகள் மிக முக்கியமானது. அது இந்த போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியின் இறுதிவரை விளையாடி இன்னும் கூடுதலாக ரன்களை சேர்த்திருந்தால் தோல்வியை தவிர்த்து இருக்கலாம் என தோனி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement