இஷான் கிஷன் இந்திய அணிக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே தோனி – என்ன சொன்னாரு தெரியுமா?

MS-Dhoni
- Advertisement -

இந்திய அணியின் இளம் அதிரடி துவக்க வீரரான இஷான் கிஷன் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 131 பந்துகளில் 24 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 210 ரன்கள் குவித்து வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருந்தார். ரோகித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய இஷான் கிஷன் நிச்சயம் தவிர்க்க முடியாத துவக்க வீரராக உருவெடுப்பார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Ishan-Kishan

- Advertisement -

அந்த வகையில் நேற்றைய போட்டியில் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் சற்றும் பயமின்றி வங்கதேச பவுலர்களை தனது அதிரடியால் புரட்டி எடுத்தார். இஷான் கிஷனின் இரட்டை சதம், விராட் கோலியின் அற்புதமான சதம் என இந்திய அணி நேற்றைய போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 409 ரன்களை குவித்தது.

பின்னர் 410 அடித்தால் வெற்றி என்ற மாபெரும் இலக்கை துரத்திய பங்களாதேஷ் அணியால் 182 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்ததால் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் இஷான் கிஷன் அறிமுகம் ஆவதற்கு முன்னதே அவருடைய திறனை தோனி கண்டு வியந்ததாகவும், இஷான் கிஷன் குறித்து தோனி கூறிய சில கருத்துக்களை தற்போது இஷான் கிஷனின் பயிற்சியாளர் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவரின் பயிற்சியாளர் தோனி பற்றி கூறுகையில் :

Ishan Kishan 1

அப்போது இஷான் கிஷன் இந்திய அணிக்காக கூட அறிமுகமாகவில்லை. ஆனால் தோனி அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. இஷான் கிஷன் நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாட வேண்டிய ஒரு வீரர். அப்படி அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றால் அது அவருக்கு இழைக்கப்படும் அநீதி என்று தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வீரரான இஷான் கிஷனை அதே மாநிலத்தைச் சேர்ந்த சீனியர் வீரரான தோனி நிறைய நேரங்களில் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு.

- Advertisement -

அதனால் தான் தோனி அவரது திறனை அன்றே கணித்து கூறியதாக அந்த பயிற்சியாளர் தெரிவித்தார். அதோடு இசான் கிஷனின் சகோதரரும் ஒரு மிகச் சிறப்பான கிரிக்கெட் வீரர் தான். ஆனால் அவர் மருத்துவ படிப்புக்காக கிரிக்கெட்டை விட்டு விட்டார் என்றும் அவர் மெடிக்கல் டிகிரி படித்துக் கொண்டிருக்கிறார் என்றும் பயிற்சியாளர் கூறினார்.

இதையும் படிங்க : இவரு பாராட்டுறாரா? இல்ல கிண்டல் பண்றாரா? இந்திய அணியின் பேட்டிங் குறித்து – மைக்கல் வாகன் போட்ட பதிவு

வங்கதேச அணிக்கு எதிராக தான் அடித்த இரட்டை சதம் குறித்து பேசிய அவர் : இந்த வங்கதேச தொடருக்கு கிளம்புவதற்கு முன்னதாகவே தனது அப்பாவிடம் இந்த தொடரில் ஒரு வாய்ப்பாவது எனக்கு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் நான் 150 ரன்கள் அடிப்பேன் என்று கூறிவிட்டு தான் வந்ததாகவும் ஆனால் இரட்டை சதமே அடித்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement