
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது நவம்பர் மாதம் 24,25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதோடு இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியின் தக்க வைக்கும் வீரர்களை அக்டோபர் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக நாளை மறுதினம் ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள் என்பது குறித்த முழு பட்டியலும் வெளியாகும்.
அந்த தகவல் குறித்தே தற்போது அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணி, எந்தெந்த வீரர்களை தக்க வைக்க வேண்டும்? என்று ரசிகர்கள் எடுத்து வரும் முடிவு குறித்து பேசியுள்ள சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கூறுகையில் :
நீங்கள் எதிர்பார்ப்பது போன்று ஐபிஎல் ஏலம் நடைபெறாது. அது ஒரு வினோதமான நிகழ்வு. ஏனெனில் ரசிகர்கள் எந்தெந்த அணியில், எந்தெந்த வீரர்கள் விளையாடலாம் என்று தங்களுக்குள் ஆசைப்படலாம். ஆனால் செயல் முறையில் அப்படி அனைத்து வீரர்களையும் விளையாட வைப்பது கடினம்.
ஏனெனில் ஒவ்வொரு அணியின் நிர்வாகமும் தங்களது அணியில் உள்ள தொகை மற்றும் வீரர்களின் பலம் ஆகியவற்றை ஆராய்ந்தே வீரர்களின் தேர்வில் ஈடுபடுவார்கள். ரசிகர்கள் ஆர்வத்தின் மிகுதியாக எந்தெந்த அணி, எந்தெந்த வீரர்களை வாங்கும் என்று கணிக்கலாம். ஆனால் ஐபிஎல் ஏலத்தில் நினைத்தது போல எந்த ஒரு அணியும் எந்த ஒரு வீரரையும் வாங்க முடியாது. ஏனெனில் அதிக பணம் கையிருப்பு கொண்ட அணி எந்த வீரர்களையும் வாங்க நினைக்கும்.
இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் போல 3வது டெஸ்டில் புதிய வீரரை களமிறக்கும் கம்பீர்.. திடீர் வாய்ப்பு எப்படி? வெளியான தகவல்
அப்படி பெரிய தொகைக்கு ஒரு வீரரை வாங்கினால் அந்த வீரர் சிறப்பாகவே விளையாடியாக வேண்டிய சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் ஐபிஎல் ஏலத்தில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் எந்த அணிக்கு நீங்கள் தேர்வானாலும் அந்த அணிக்கு தாங்கள் சிறப்பாக செயல்பட்டால் அந்த அணிக்கு வணிகம் அதிகரிக்கும், உங்களது பொருளாதாரமும் உயரும் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.