வாஷிங்டன் சுந்தர் போல 3வது டெஸ்டில் புதிய வீரரை களமிறக்கும் கம்பீர்.. திடீர் வாய்ப்பு எப்படி? வெளியான தகவல்

Harshit Rana
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி நடைபெறுகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 கழித்தும் நியூசிலாந்துக்கு எதிராகவும் முதல் முறையாக இந்தியா சொந்த மண்ணில் ஒரு தொடரில் அவமான தோல்வியை பதிவு செய்துள்ளது.

அதன் காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற 3வது போட்டியிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரையும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா இந்திய அணியில் இணைய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

டெல்லி வீரர்:

2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் கௌதம் கம்பீர் மேற்பார்வையில் கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவினார். அதன் காரணமாக கடந்த இலங்கை ஒருநாள் தொடரிலும், வங்கதேச டி20 தொடரிலும் அவர் இந்திய அணிக்காக தேர்வானார். இருப்பினும் அந்த தொடர்களில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெறாத அவர் அடுத்ததாக ஆஸ்திரேலியா நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் 2024 ரஞ்சிக் கோப்பையில் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில் 19.3 ஓவரை வீசிய ராணா 5 விக்கெட்டுகளை எடுத்ததுடன் பேட்டிங்கில் 8வது இடத்தில் களமிறங்கி 59 ரன்கள் குவித்தார். பின்னர் 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஆல்ரவுண்டராக டெல்லி அணியின் வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

சுந்தர் போல:

அதன் காரணமாக அவரை இந்திய அணியில் சேர்க்க கௌதம் கம்பீர் முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்காக தங்கள் அணியிலிருந்து ஹர்ஷித் ராணா விடுவிக்கப்பட்டுள்ளதாக டெல்லி அணியின் பயிற்சியாளர் சரந்திப் சிங் அறிவித்துள்ளார். சமீபத்தில் இதே டெல்லி அணிக்கு எதிராக 153 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகள் எடுத்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் திடீரென நியூசிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் தேர்வானார்.

இதையும் படிங்க: செயற்கையான பிட்ச்களில் இந்தியா இதை செய்வாங்க.. ஆனா ஆஸ்திரேலியா தான் ஜெய்க்கும்.. ஹைடன் கணிப்பு

அப்போட்டியில் வாய்ப்பையும் பெற்ற அவர் 11 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அதே போல தற்போது ரஞ்சிக் கோப்பையில் அசத்திய தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்சித் ராணாவை 3வது போட்டியில் பயிற்சியாளர் கம்பீர் தேர்வு செய்துள்ளார். அதன் காரணமாக 3வது போட்டியில் அவர் அறிமுகமாக விளையாடுவதற்கும் வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சொல்லப்போனால் ஆஸ்திரேலிய தொடருக்காக ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க விரும்பினால் கண்டிப்பாக ஹர்ஷித் ராணா 3வது நியூஸிலாந்து போட்டியில் அறிமுகமாக களமிறங்குவார் என்று தெரிய வருகிறது.

Advertisement