இந்தமுறை செய்த தப்பை அடுத்தமுறை செய்யமாட்டேன் – பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட தல தோனி

Dhoni
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 12 வது லீக் மேட்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 188 ரன்கள் அடித்தது. பிறகு ஆடிய ராஜஸ்தான் அணியால் 143 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 45 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது சென்னை அணி.

csk vs rr

இந்த போட்டி முடிந்ததும் பேட்டியளித்த சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது பேட்டிங்கையே சுயவிமர்சனம் செய்து கொண்டார். அப்பேட்டியில் அவர் அவர் விளையாடிய பேட்டிங் பற்றி கூறியதாவது :

- Advertisement -

நாங்கள் இன்னும் கொஞ்சம் கூடுதல் ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் எங்களால் எடுக்க முடியவில்லை, நான் சந்திக்கும் முதல் 6 பந்துகளால் ஆட்டத்தின் போக்கே மாறிவிடும். மேலும் சொல்லப்போனால் அது தோல்விக்கு கூட வழிவகை செய்யும். இனி வரும் போட்டிகளில் அதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டுமென்று கூறினார். மேலும் கூறிய அவர் :

Dhoni-1

நான் என்னுடைய அணிக்கு எது தேவையோ அதை மட்டுமே செய்ய விரும்புகிறேன். 24 வயதில் நான் சிறப்பாக செயல்படுவேன் என்று எந்த உறுதியும் அளிக்கவில்லை. அதேபோல்தான் இப்போது 40 வயதாகும் போதும் என்னால் எந்த உறுதியும் அளிக்க இயலாது. ஆனால் குறைந்தபட்சம், மற்றவர்கள் என்னை பார்த்து நீ விளையாடுவதற்கு அன்ஃபிட் என்று கைகாட்டாமல் இருப்பதே எனக்கு மிகப் பெரிய பாஸிட்டிவ் என்றும் கூறினார்.

நேற்று பேட்டிங் ஆடிய தோனி அவர் கூறியது போலவே முதல் 6 பந்துகளில் தடுமாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 17 பந்துகள் ஆடிய தோனி 18 ரன்கள் எடுத்தார்.

Advertisement