MS Dhoni : தல என்றழைக்கும்போது எனக்கு பிடிக்கவில்லை. இப்போது பிடிக்கிறது – அதன் காரணம் இதுதான்

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Dhoni-Csk
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை அடித்துள்ளது. அதிகபட்சமாக ரெய்னா 59 ரன்களை குவித்தார். இதனால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆடிய டெல்லி 16.2 அணி ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆடி 44 ரன்களை குவித்தார். சென்னை அணி சார்பாக இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்துவீசி 3.2 ஓவர்களில் 12 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிரடியாக விளையாடிய தோனி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டி முடிந்து பேசிய தோனி கூறியதாவது : சென்னை ரசிகர்கள் என்மீது அதிக அன்பினை வைத்துள்ளார்கள். அவர்கள் முதலில் சென்னை அணிக்கான பாடலில் தல என்ற வார்த்தை இடம்பெறும் என்னை தல என்று அழைத்ததில் எனக்கு பெரிதாக ஏதும் தெரியவில்லை. ஆனால், தற்போது புரிகிறது. தல என்று அவர்கள் மனதார தங்களது தலைவராக என்னை அழைக்கிறார்கள்.

Dhoni-2

தல என்னும் பெயர் ரொம்ப ஸ்பெஷல் ஆக இருக்கிறது. அவர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பிற்காக என்னை அப்படி அழைக்கிறார்கள். மேலும், என்மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் மதிப்பு எனக்கு தற்போது நன்றாக புரிகிறது. மேலும் நான் நேற்று சிறப்பாக ஆடியதற்கு காரணமும் சென்னை ரசிகர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகத்தான் என்று தோனி கூறினார்.

Advertisement