MS Dhoni : 100% கிரிகெட் ஆடினாலும் அது போதாது. போட்டிக்கு எப்போதும் ஒரு குறை உண்டு – தோனி

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Dhoni-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. இந்த போட்டியில் டாஸ் போட தோனி மைதானம் வந்ததும் ரசிகர்களின் கரகோஷத்தால் மைதானம் அதிர்ந்தது. மேலும், டாஸ் இழந்தது குறித்தும், சென்னை அணி குறித்தும் தோனி ஒரு சிறிய பேட்டி அளித்தார்.

அதன்படி தோனி கூறியதாவது : இன்று மேகமூட்டத்தால் மைதானம் சூழப்பட்டுள்ளதால் பனி குறைவாகவே இருக்கும் இதனால் முதலில் பேட்டிங் செய்வது நல்லது என்றே நினைக்கிறன். நீங்கள் 100% சர்வதேச போட்டிகளில் விளையாடி இருந்தாலும் உடற்தகுதியில் சிறிய குறைபாடு இருக்கும். எனக்கும் இன்று இருமல் உள்ளது என்று தோனி கூறினார்.

Dhoni

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை அடித்துள்ளது. அதிகபட்சமாக ரெய்னா 59 ரன்களை குவித்தார். இதனால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Advertisement