எனக்கு ரொம்ப வயசாயிடுச்சி. டெல்லி போட்டிக்கு பிறகு பேசிய தல தோனி – காரணம் என்ன தெரியுமா ?

Dhoni
- Advertisement -

வெள்ளிக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி தீபக் சஹரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதன் காரணமாக 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணியால் வெறும் 106 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதன் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுப்லஸ்ஸிஸ் மற்றும் மொயின் அலி ஜோடி துணையோடு 15.4 ஓவரில் எளிதாக இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

chahar 1

- Advertisement -

அந்த போட்டி கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 200வது போட்டி ஆகும். சென்னை அணிக்காக தனது 200 ஆவது போட்டியை விளையாடிய தோனி தன்னுடைய அனுபவம் குறித்து பேசினார். 2008ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை சென்னை அணிக்காக விளையாடி வருகிறேன். எனக்கு மிகவும் வயதாகி விட்டது என நினைக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே கூறினார். தென் ஆப்ரிக்கா, துபாய் என வெளியூர்களிலும் விளையாடி சென்னையிலும் விளையாடி வெவ்வேறு அனுபவங்களை பார்த்து விட்டேன். மேலும் சென்னை மைதானம் குறித்து பேசிய தோனி 2011ஆம் ஆண்டுவரை சென்னை மைதானம் மிகவும் சிறப்பாக இருந்தது.

அதன் பின்னர் மைதானம் சீரமைக்க போய் அதனுடைய தன்மையை அது இழந்து விட்டது. அதில் இருந்தே மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப நாங்கள் மாற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்று கூறினார். மேலும் தற்போது மும்பை மைதானத்தை தங்களது ஹோம் மைதானமாக கொண்டு விளையாடி வரும் தோனி, மைதானம் எங்களுக்கு ஹோம் மைதானமாக அமையும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. மும்பை மைதானம் எப்பொழுதும் சிறப்பாக இருக்கும். பந்து வீச்சுக்கும் பல சாதகமான மைதானமாக மும்பை மைதானம் எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கும்.

dhoni

எனினும் அந்தந்த நாள் தான் மைதானத்தில் தட்ப நிலை குறித்து முடிவெடுக்கும் இன்று இறுதியாக தோனி கூறி முடித்தார். தோனியை பற்றி சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஒரு சில வார்த்தைகள் பகிர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு மேலாக சென்னை அணியை தனது தோள்களில் சுமந்து கொண்டிருக்கிறார். அணிக்காக எப்போதும் சிந்தித்துக் கொண்டு அணியின் வெற்றியை பற்றி மட்டுமே யோசிக்க கூடிய ஒரு வீரர் தோனி.

Fleming

இப்பொழுதும் தனது முழுப் பங்களிப்பை கொடுத்துக் கொண்டு வருகிறார். இன்னும் வெளிப்படையாக கூற வேண்டுமென்றால் மகேந்திர சிங் தோனி தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதயத்துடிப்பு என்று கூறுவேன். இவ்வாறு ஸ்டீபன் பிளமிங் தோனியை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.

Advertisement