CSK vs GT : நேத்து ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்க. இன்னைக்கு நாங்க அவங்கள சந்தோஷ படுத்தப்போறோம் – டாசுக்கு பிறகு தோனி பேட்டி

MS-Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று மே 28-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறயிருந்தது. ஆனால் நேற்று நடைபெறயிருந்த இந்த போட்டியானது மழை காரணமாக நடைபெறாமல் போனது. அதோடு நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டாலும் போட்டி இன்று ரிசர்வ் டேவிற்கு தள்ளிவைக்கப்பட்டது. அந்தவகையில் இன்று மே 29-ஆம் தேதி இறுதிப்போட்டியானது துவங்கி நடைபெற்று வருகிறது.

CSK vs GT

- Advertisement -

இந்த போட்டியில் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியும், பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிவருகின்றன. இந்தப்போட்டியில் வெற்றிபெறும் அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதனால் இந்தப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சம் தொட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அகமதாபாத் மைதானத்தில் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி முதலில் தாங்கள் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது.

CSK vs GT

இந்நிலையில் இந்த போட்டியில் டாசில் வெற்றிபெற்ற பிறகு தோனி அளித்த பேட்டியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் டாசிற்கு பிறகு பேசிய தோனி கூறுகையில் : முதலில் நாங்கள் பந்துவீச விரும்புகிறோம். ஏனெனில் மழையை கணக்கில் கொண்டுதான் இந்த முடிவினை எடுத்துள்ளேன். நேற்று முழுவதும் நாங்கள் ஓய்வறையிலே காத்திருந்தோம்.

- Advertisement -

ஒரு கிரிக்கெட் வீரராக எப்பொழுதுமே களத்தில் இறங்கி விளையாடவே அனைவரும் விரும்புவார்கள். எங்களை விட நேற்று ரசிகர்களே மிகவும் கஷ்டப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று அவர்களை நாங்கள் என்டர்டெய்ன் செய்ய காத்திருக்கிறோம். மைதானம் முற்றிலும் மூடி வைக்கப்பட்டிருந்ததால் நிச்சயம் 20 ஓவர்கள் முழு போட்டி நடைபெறும் என்றே தான் கருதுவதாக தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IPL 2023 : காலம் முழுக்க அவரால விளையாட முடியுமா? நன்றி சொல்லி வழியனுப்புங்க – ரசிகர்களுக்கு கபில் தேவ் கோரிக்கை

இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணியானது 214 ரன்களை அடித்துள்ளதால் தற்போது சி.எஸ்.கே அணி 215 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் களமிறங்க தயாராகி வருகிறது.

Advertisement