IPL 2023 : காலம் முழுக்க அவரால விளையாட முடியுமா? நன்றி சொல்லி வழியனுப்புங்க – ரசிகர்களுக்கு கபில் தேவ் கோரிக்கை

kapil3
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 2 மாதங்களாக நடைபெற்ற லீக் மற்றும் நாக் அவுட் சுற்றின் முடிவில் முன்னாள் சாம்பியன் சென்னை மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் ஆகிய அணிகள் ஃபைனலுக்கு தகுதி பெற்றன. இருப்பினும் மே 28இல் நடைபெற வேண்டிய அந்தப் போட்டி மழையால் முழுமையாக ரத்து செய்யப்பட்டு ரிசர்வ் நாளில் நடைபெற்றது. முன்னதாக இந்த தொடரில் சென்னையின் கேப்டன் எம்எஸ் தோனிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிரணிகளை மிஞ்சி மஞ்சள் உடை அணிந்து மிகப்பெரிய ஆதரவு கொடுத்தனர்.

- Advertisement -

ஏனெனில் இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று வரலாற்றின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை சாதனை படைத்து அனைவரது நெஞ்சங்களில் நீங்காத இடத்தை பிடித்துள்ள அவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அதனால் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அவர் விளையாடுவதை பார்க்க அனைவருமே விரும்புகின்றனர். இருப்பினும் வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பது போல் 41 வயதிலும் இத்தொடரில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியான சிக்சர்களை பறக்க விட்டு தன்னை மிகச் சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்த அவர் கேப்டனாகவும் ரோகித் சர்மா, பாண்டியா போன்றவர்களை திட்டம் போட்டு அவுட்டாக்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கபில் தேவ் கோரிக்கை:
அதனால் நல்ல ஃபிட்னஸை கடைபிடிக்கும் அவர் இம்பேக்ட் விதிமுறையை பயன்படுத்தி இன்னும் சில வருடங்கள் விளையாட வேண்டும் என்பதே ஷேன் வாட்சன், ரோகித் சர்மா பிரட் லீ, யூசுப் பதான், கெவின் பீட்டர்சன் போன்றவர்களின் விருப்பமாக உள்ளது. ஆனாலும் விரைவில் 42 வயதை தொடும் அவர் முழங்கால் வலியால் அவதிப்படுவதால் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக “ஓய்வு பெறுவதைப் பற்றி நான் இன்னும் முடிவெடுக்கவில்லை” என்று சொன்னாலும் பொதுவாகவே வழியனுப்பும் போட்டிகளை விரும்பாமல் ஆச்சரியப்படும் முடிவுகளை எடுக்கும் குணத்தை கொண்ட தோனி திடீரென ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது.

இருப்பினும் விடை கொடுப்பதற்கு தயாராக இல்லாத எந்த ரசிகர்களும் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கோரிக்கையை வைக்கின்றனர். இந்நிலையில் தோனியாக இருந்தாலும் காலம் முழுவதும் விளையாட முடியாது என்பதை உணர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்து ரசிகர்கள் விடை கொடுக்க வேண்டுமென முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தோனி 15 வருடங்களாக விளையாடுகிறார். இதற்கு மேலும் அவரிடம் நாம் என்ன எதிர்பார்க்க வேண்டும்? அவர் தனது வாழ்நாள் முழுவதும் விளையாட வேண்டுமா? அது நிச்சயமாக நடைபெறாது. எனவே அவரைப் போன்ற நட்சத்திர வீரர் 15 வருடங்கள் விளையாடியதற்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். அவர் நாளை அல்லது அடுத்த சீசனில் விளையாடாமல் இருக்கலாம். ஆனால் தோனி கடைசி வரை சிறந்த கிரிக்கெட்டையை விளையாடினார். அவர் பெரிய ரன்களை எடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் தன்னுடைய அணியின் பிடிப்பை வைத்துள்ளார். அது தான் கேப்டனின் முக்கியத்துவத்தை காட்டுகிறது”

Kapil-Dev

“மற்ற விளையாட்டுகளில் கேப்டன்களுக்கு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் கிரிக்கெட்டில் கேப்டன்கள் முக்கியம் என்பதை நிரூபிக்கும் தோனிக்கு தலை வணங்குகிறேன். ஒருவரால் வருடம் முழுவதும் தொடர்ந்து விளையாடினால் ஃபிட்னஸ் கடைபிடிப்பது எளிது. ஆனால் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடும் போது அதை பின்பற்றுவது கடினமாகும். அதற்காக அவரை நாம் பாராட்ட வேண்டும். என்னைப் பொறுத்த வரை தோனி யாருடனும் ஒப்பிட முடியாதவர்”

இதையும் படிங்க:இந்த ஐ.பி.எல் தொடர்ல என்னை கவர்ந்த பிளேயர் இவர்தான். இவருக்கு பிரைட் பியூச்சர் இருக்கு – ஏ.பி.டி பாராட்டு

“ஆனால் சச்சின், கவாஸ்கர், கும்ப்ளே, யுவராஜ், சேவாக் ஆகியோரது வரிசையில் விராட் கோலியும் ஒருநாள் விடைபெற்றே தீர வேண்டும். அதனால் அவரைப் போன்றவர் விடைபெறும் போது கொண்டாட வேண்டுமே தவிர சோகமடைய கூடாது. ஒரு ரசிகனாக நானும் தோனி விடை பெறுவதை விரும்பவில்லை. ஆனால் கிரிக்கெட்டராக வேறு வழியில்லை” என்று கூறினார்.

Advertisement