MS Dhoni : முதல் 10 ஓவர்களுக்கு கட்டுபாடுடன் இருந்து தோல்வி அடைந்ததுக்கு இதுவே காரணம் – தோனி

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 59 ரன்களை குவித்தார்.

csk-vs-mi

- Advertisement -

பிறகு 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி துவக்கத்திலேயே சரிவை கண்டது. ராயுடு மற்றும் வாட்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், பின்னால் வந்த வீரர்களும் வரிசையாக நடையை கட்ட சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்த போட்டியின் தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி : இந்த போட்டி எங்களிடம் இருந்து சில வழிகளில் தவறாக சென்றது என்று நினைக்கிறன். நாங்கள் துவங்கிய விதம் மற்றும் முதல் 10 ஓவர்களுக்குள் ஆட்டம் எங்களது கட்டுப்பாட்டுடன் தான் இருந்தது. அதன்பிறகு செய்த பீல்டிங் தவறுகள், சில கேட்சுகளை விட்டது மற்றும் டெத் ஓவர்களில் சரியாக பந்துவீசாதது போன்ற பல காரணங்களால் ஆட்டம் கைவிட்டு போனது.

bravo

போட்டி தோற்றது வருத்தம் தான் அதைவிட தற்போது புதிய பிரச்னை ஒன்று உண்டாகியுள்ளது. பிராவோ தசைப்பிடிப்பினால் அவதிப்பட்டு வருகிறார். ஏற்கனவே காயம் காரணமாக நெகிடி அணியில் இருந்து நீங்கினார். பிறகு வில்லி தனது சொந்த பிரச்சனைக்காக அணியில் இருந்து விலகினார். தற்போது பிராவோ காயம் அடைந்திருப்பது மிகவும் கவலை அடைய வைத்திருக்கிறது என்று கூறினார் .

Advertisement