MS Dhoni : இவர்கள் இருவரும் ஒயின் போன்றவர்கள் நாட்கள் ஆக ஆக சுவை அதிகரிக்குமே தவிர குறையாது – தோனி கருத்து

ஐ.பி.எல் தொடரின் 23ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும்

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 23ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணிக்கு 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கொல்கத்தா அணி சார்பாக 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ரசல் 44 பந்துகளில் 50 ரன்களை அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். ரசலின் இந்த ஆட்டம் காரணமாகவே கொல்கத்தா அணி ஓரளவு ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

Chahar

பின்னர் ஆடிய சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 111 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. சென்னை அணி சார்பாக துவக்க ஆட்டக்காரர் டுபிலிஸிஸ் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். தீபக் சாகர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

- Advertisement -

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய தோனி கூறியதாவது : சென்னை அணியின் பந்துவீச்சாளர்களில் செயல் அற்புதமாக இருக்கிறது. எந்த எதிரணியையும் அவர்கள் சிறப்பாக கட்டுப்படுத்துகின்றனர். குறிப்பாக ஹர்பஜன் சிங் எப்போது அணியில் ஆடினாலும் தனது முழுத்திறனையும் அளித்து முழுஈடுபாட்டுடன் ஆடுகிறார்.

Tahir

மேலும், இம்ரான் தாஹிர் சிறப்பாக விளையாடி வருகிறார். அணிக்கு தேவையான நேரத்தில் தாஹிர் விக்கெட்டுகளை எடுத்து தருகிறார். இவர்கள் இருவரும் முதிர்ச்சி அடைய அடைய சிறப்பாக வீசி வருகிறார். அவர்கள் இருவரும் ஒயின் போன்றவர்கள் நாட்கள் ஆக ஆக சுவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது முதன்முறையாக மதுவினை வைத்து குறிப்புணர்த்தியுள்ளார் தோனி. தொனிக்கு குடிப்பழக்கம் மற்றும் எந்த பழக்கமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement