MS Dhoni : தோனியின் இந்த தவறான முடிவினால் தான் தோல்வி ஏற்பட்டது – விவரம் உள்ளே

ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் குவாலிபயர் 1 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும்

Dhoni-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் குவாலிபயர் 1 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை 131 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ராயுடு 42 ரன்களும், தோனி 37 ரன்களை குவித்தனர். சாகர் 4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பிறகு 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார். மேலும் ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்.

இந்த போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது டாஸ். நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற தோனி வழக்கமாக பீல்டிங்கையே தேர்வு செய்வார். அதனால் முதலில் சிறப்பாக பந்துவீசி எதிரணியை கட்டுப்படுத்தி அடுத்து அற்புதமாக சேசிங் செய்து சென்னை அணி வெற்றி பெறும்.

ஆனால், நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த வருட ஆரம்பத்தில் இருந்து சென்னையில் நடந்த போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணி குறைந்த ரன்களே அடித்துள்ளது. சென்னையில் அதிகமாக விளையாடி பழக்கப்பட்ட சி.எஸ்.கே அணி நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Advertisement