வீடியோ : இந்திய அணியினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தோனி, ஆலோசனைகளை ஆர்வமுடன் கேட்டறிந்த வீரர்கள்

MS Dhoni
- Advertisement -

2023 அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடர்களை 3 – 0 (3) என்ற கணக்கில் அடுத்தடுத்த ஒயிட் வாஷ் வெற்றிகளுடன் வென்ற இந்தியா ஐசிசி தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக முன்னேறியது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கும் இந்திய அணியில் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கிறார்கள். ஏற்கனவே தரவரிசையில் உலகில் நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலிக்கும் இந்தியா 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் இத்தொடரில் களமிறங்குகிறது.

மேலும் கடந்த நவம்பரில் நடைபெற்ற டி20 தொடரில் 1 – 0 (3) என்ற கணக்கில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் சாய்த்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்தியா இம்முறை தங்களது சொந்த மண்ணில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் ஒருநாள் தொடரை இழந்து நம்பர் ஒன் இடத்தையும் கோட்டை விட்ட நியூசிலாந்து இந்த டி20 தொடரில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க போராட உள்ளது. அதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இத்தொடர் ஜனவரி 27ஆம் தேதியன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது.

- Advertisement -

தோனியின் விசிட்:
முன்னாள் ஜாம்பவான் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி அவர்களின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறும் அப்போட்டியில் பங்கேற்பதற்காக ஏற்கனவே அங்கு பயணித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியினர் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அதே மைதானத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் 2023 ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் எம்எஸ் தோனியும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இறுதியில் பயிற்சி முடித்த அவர் இந்திய அணியின் உடைமாற்றுமடைக்குச் சென்று இந்திய வீரர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தார்.

அவரது திடீர் வருகையால் மிகவும் மகிழ்ச்சியடைந்த இந்திய வீரர்கள் நீண்ட நாட்கள் கழித்து தங்களுக்கு மிகவும் பிடித்த கேப்டனை நேரில் பார்த்து ஆச்சரியத்துடன் புன்னகை முகத்துடன் அவரிடம் பேசினார்கள். குறிப்பாக ஹர்திக் பாண்டியா, இஷான் கிசான், சுப்மன் கில் ஆகியோர் கையில் இளநீர் குடித்துக் கொண்டு நின்ற தோனியிடம் மனம் விட்டு மகிழ்ச்சியாக பேசி மகிழ்ந்தனர். மேலும் சூர்யகுமார் யாதவ், சஹால், சிவம் மாவி உள்ளிட்ட இதர இந்திய அணியினரும் அவரை பார்த்த மகிழ்ச்சியில் இருந்தனர். அத்துடன் அவரது காலத்துக்கு பின் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட பயிற்சியாளர் குழுவினர் தங்களை தோனியிடம் அறிமுகப்படுத்தி பேசினார்கள்.

- Advertisement -

அதை விட அவரைப் பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சில ஆலோசனைகளையும் கேட்டறிந்தார். மொத்தத்தில் நீண்ட நாட்கள் கழித்து திடீரென்று தோனியை பார்த்த இந்திய வீரர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அவர்களது முகத்தில் தெளிவாக தெரிந்தது. அதைப் பார்த்து இந்திய ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியடையும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து முதல் டி20 போட்டியை தோனி நேரடியாக மைதானத்திலிருந்து பார்ப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத ராஞ்சியில் பிறந்து இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சாதனை படைத்த தோனி உலக வரைபடத்தில் ராஞ்சி நகரின் அடையாளமாக திகழ்கிறார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: IND vs NZ : அப்ரிடி, கெயிலுக்கு அடுத்து மாஸ் சாதனையில் 3 ஆம் இடம்பிடித்த ரோஹித் சர்மா – ஹிட்மேன்னா சும்மாவா

சொல்லப்போனால் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது எழுச்சிக்கு பின்பு தான் அவரது சொந்த ஊரான ராஞ்சியில் இப்போட்டி நடைபெறும் ஜேஎஸ்சிஏ கிரிக்கெட் மைதானம் கடந்த 2013ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அப்படி தங்களது மாநிலத்தை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில் அசத்திய தோனியை கௌரவிக்கும் வகையில் அந்த மைதானத்தில் உள்ள ஒரு பெவிலியனுக்கு “எம்எஸ் தோனி” பெயர் ஏற்கனவே சூட்டப்பட்டுள்ளது.

Advertisement