இதை பண்ணா மட்டும் போதும். இலங்கை டீமோட மிகப்பெரிய சொத்தா பதிரானா மாறுவாரு – தல தோனி பாராட்டு

Pathirana-and-Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெரிய விலைக்கு ஏலம்போன பல வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்ட பல இளம் வீரர்கள் தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை அணிக்காக 20 லட்ச ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இலங்கை அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானாவின் பந்துவீச்சும் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Pathirana 1

- Advertisement -

20 வயதான அவரை கடந்த ஆண்டு தோனி சென்னை அணியில் இணைத்து விளையாட வைத்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் சென்னை அணிக்காக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் பதிரானா நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சேப்பாக்கத்தில் வைத்து மும்பை அணியை வீழ்த்த மிகவும் உறுதுணையாக இருந்தார்.

ஏனெனில் நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய மதீஷா பதிரானா வெறும் 15 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு டெத் ஓவர்களில் வந்ததால் மும்பை அணி பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல முடியாமல் சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே மதீஷா பதிரானா செயல்பாடுகள் குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி பாராட்டுகளை வழங்கியிருந்த வேளையில் நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்னரும் பதிரானா குறித்த பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.

Pathirana

இது குறித்து தோனி கூறுகையில் : மதீஷா பதிரானா போன்ற வித்தியாசமான ஸ்டைலில் பந்துவீசும் பவுலர்களுக்கு எதிராக எந்த ஒரு பேட்ஸ்மேனும் சிக்கலை சந்திப்பார்கள். அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது சாதாரணமாக இருக்காது. அதோடு அவர் தனது லைன் மற்றும் லென்த்தில் மிகவும் கட்டுக்கோப்பாக இருக்கிறார். அதனால அவரால் சிறப்பாக பந்து வீச முடிகிறது.

- Advertisement -

அதேபோன்று என்னை பொருத்தவரை மதீஷா பதிரானா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடக்கூடாது. அவரது பணிச்சுமை காரணமாக குறைந்த அளவிலான போட்டிகளிலேயே அவரை விளையாட வைக்க வேண்டும். குறிப்பாக ஐசிசி தொடர்களில் அவரை விளையாட வைத்தால் நிச்சயம் இலங்கை அணியின் மிகப்பெரிய சொத்தாக அவர் உருவெடுப்பார்.

இதையும் படிங்க : CSK vs MI : நான் அவரோட தீவிர ரசிகன். அதன் அதே ஸ்டைல்ல கொண்டாடுறேன் – ஆட்டநாயகன் மதீஷா பதிரானா

அவரின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு சரியான அளவில் கிரிக்கெட்டை விளையாட வைக்கும் பட்சத்தில் இலங்கை அணியின் முக்கிய வீரராகவும் அவர் மாறுவார். கடந்த ஆண்டு சற்று ஒல்லியாக இருந்த அவர் இம்முறை சற்று தசை பிடிப்புடன் பலமாகவே இருக்கிறார் என தோனி அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement